search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை புதிய கடற்கரையில் உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல் தேங்கி உள்ள மழைநீர்
    X
    நாகை புதிய கடற்கரையில் உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல் தேங்கி உள்ள மழைநீர்

    நாகை கடற்கரையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

    நாகை கடற்கரையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில் பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமர முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையின் காரணமாக புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.

    உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை சுற்றி மழைநீர் சிறிய குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் தினந்தோரும் புதிய கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து நாகை தொகுதி மக்கள் கூறியதாவது:-

    நாகை பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக புதிய கடற்கரை உள்ளது நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று இளைப்பாறுவதும், நடைபயிற்சி மேற்கொள்ளவதுமக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களின் நலனுக்காக புதிய கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தை மேடாக்கி, மீண்டும் மழை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×