என் மலர்
செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணன் பூமி பூஜை செய்துமேடை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த காட்சி.
பா.ஜ.க. அலுவலக திறப்பு விழா - திருப்பூரில் மேடை அமைக்க பூமி பூஜை
பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருப்பூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் அலுவலக திறப்புவிழா வருகிற 24-ந்தேதி தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார். இதற்காக விழா மேடை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
பூமி பூஜையில் கேரள மாநில பா.ஜ.க. பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
மாவட்டதலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, மாவட்ட பொதுசெயலாளர்கள் கே.சி.எம்.பி சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா எஸ்.தங்கராஜ் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story






