என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி.
    • உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள்.

    சீர்காழி:

    சீர்காழியில் தி.மு.க. நகர இளைஞரணிஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்து வமனையில் நவம்பர் 27ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசே கரன், துணை தலைவர் சுப்ப ராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.குழந்தைகளுக்கு தங்க கணையாழிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பச்சிளம் குழந்தைகளுக்கு புத்தாடைகளும் வழ ங்கினார்.

    நிகழ்ச்சியில்விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் செல்வமுத்து, பொறியாளர் தன்ராஜ், நகர பொருளாளர்கள் கோட ங்குடி சங்கர், பந்தல்.முத்து, முன்னாள் பொருளாளர் துரை, நிர்வாகிகள் லெனின், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றிக் கூறினார்.

    • அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
    • பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.

    இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,

    இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.

    'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
    • தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை. தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு தலைமை ஆசிரி யராக சாமுவேல் செல்ல துரை பணியாற்றி வருகிறார்.

    இப்பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர்சா முவேல் செல்லதுரை பள்ளியின் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்க ப்பட்ட மாணவி ஒருவரின் பெ ற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா (பொறுப்பு) மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரோனா ஊரடங்கால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
    • கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளது.

    இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இந்நிலையில் சீர்காழி பழைய பஸ் நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து பழைய பஸ் நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கொரோனோ காலக ட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டு மே வாடகை விலக்கு அளித்தனர்.

    மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை.அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
    • சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    சீர்காழி:

    தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

    இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக்கல்லூரி அறிவிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடி கிராமத்திற்கு வருகைதந்த பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை 950 மி.மீ, அதில் ஒரே நாளில் சீர்காழியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தமிழ்நாட்டில் பெய்யும் பெரும் அளவு மழை நீர் வடிகாலாக மயிலாடுதுறை மாவட்டம் விளங்குகிறது.

    சரிவர தூர்வாரமல் உள்ளதே இதற்கு காரணமாகும். இதனை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்ட மாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

    நாங்கள் எந்த கட்சியிலும் கூட்டணியில் இல்லை.மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக் கல்லூரி அறிவிக்க வேண்டும்.

    ஆன்லைன் விளையா ட்டால் தமிழகத்தில் மேற்கொண்டு உயிரிழ ப்புகள் ஏற்பட்டால்அதற்கு கோப்புகளில் கையெழுத்துயிடாத தமிழக ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.

    2026 ஆம் ஆண்டு பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.அதற்கு ஏற்றார் போல் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும்.

    இட ஒதுக்கீட்டை நூறு விழுக்காடாக ஆக்க வேண்டும், அனைத்து சமுதாயத்திற்கும் சரிசமமாக இட ஒதுக்கீடு பிரித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, லன்டன் அன்பழகன், நல்லத்துக்குடி காமராஜ், உள்ளிட்ட முக்கிய பொருப்பாளர்கள் திரளாக கலந்துக் கொன்டனர்.

    • டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு 100 சதவீதம் வழங்குவதற்கு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்குவதற்கான தனி சட்டத்தை சட்டசபையில் கொண்டுவர வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் தடுப்பு பிரிவில் போதுமான போலீசார் இல்லாததால் இந்த குற்றங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதனால் போதை தடுப்பு பிரிவுக்கு 20 ஆயிரம் போலீசாரை பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் இளைய சமுதாயம் சீரழிந்துவிடும். பா.ம.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட பா.ம.க. தனித்துதான் போட்டியிட்டது. பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு 100 சதவீதம் வழங்குவதற்கு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.
    • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பள்ளி
    மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெ.தர்ஷினி, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.

    பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவ ட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலு மாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

    கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்க ப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பா டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசே கரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாமல்லன், திருமாறன், மனோகரன், ஏவி.மணி பார்த்தசாரதி, பேராசிரியர்ஜெயராமன், அஞ்சம்மாள், ரமாமணி, வழக்கறிஞர்கள் தியாகரா ஜன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
    • ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத் தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.

    ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

    எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    எனவே இடைத்தரகர் கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மஞ்சுளா, செம்பனார்கோயில் வேளாண்மை துணை இயக்குனர் தாமஸ், மயிலாடுதுறை அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன், உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது :-

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022- 23 க்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 கன்றுகள் 1 ஹெக்டர் வரப்புபரப்பிற்கு வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு2 ஹெக்டர் வரை வழங்க ப்படும். அதேபோல் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
    • 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.

    ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.

    வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.

    அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.

    மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×