என் மலர்
மயிலாடுதுறை
- ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரிடம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சேங்கலித் தெருவை சேர்ந்த கமல்தாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மகேந்திரன் பொறையார் அருகே காளியப்பன் நல்லூர் ஊராட்சி கண்ணப்ப ன்மூலை கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டு ள்ளதாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெ க்டர் செல்வி தலைமை யிலான போலீசார்கள் தலைமை காவலர்கள் மகேந்திரன், அன்பரசன், விஜய் கணேஷ், மற்றும் போலீசர்கள் செந்தில், மனோகர், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கமல்தாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். உரிமையாளர் மகேந்திரன் மற்றும் அவர் கூட இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மயிலாடுதுறை திருவாவடுதுறை கிராம ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் திருவாவடுதுறை கிராம ஊராட்சி, நடராஜ சுந்தராம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் கலந்து கொண்டு 165 பயனாளிகளுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் என்பது தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மனுநீதி நாள் முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டங்களை கவனித்து பயனடையவும், மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும், இத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் இத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.
இங்கு பயனாளிகளுக்கு உதவிகள் கொடுத்திட மட்டுமல்லாமல் பொது மக்களாகிய உங்களின் உரிமைகளை எங்களிடம் கேட்டு நலத்திட்டம் பெற வேண்டும் என்பதனை உங்களுக்கு உணர்த்திடவும் வந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
மக்கள் தொடர்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டு 94 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்க ப்பட உள்ளன. மீதமுள்ள 43 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்யு ரேகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
- நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் நடராஜன், செயளாலர் இளவரசன், கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் சிவபழனி, சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவிந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் இளையராஜா வரவேற்றார். அப்போத கோரிக்கைகளானகள பணியாளர்களின் பணிச்சு மையைக் குறைத்திடவும்.
களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடு.
உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்களின் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட.
நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட, தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமிக்க வேண்டும்.
துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரன்பாடுகளை களைந்திட.
தமிழகம் முழுமைக்கும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட திட்டப்பணியில், பணியாற்றும் களப்பணி யாளர்களுக்கு மலைப்படி வழங்கிட வேண்டும்.
அனைத்து வட்டங்க ளுக்கும் ஒரு டி.ஜி.பி.எஸ். கருவி வழங்கிட பணிச்சுமையை போக்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிதர தர்ணா போராட்டம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை துறை மாநில தலைவர் தர்மராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராமதேவன், ரமேஷ், மாவட்ட பொருளாளர் ரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.
- பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (வயது 16).
இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.
அப்பொழுது வேகத் தடையில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி லாரி பின்னால் மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மாணவர் ஹரி பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய உள்ளது.
- ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சீர்காழியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- விபத்தை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது.
இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
புகையான் நோய் தாக்கம் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- 3 மாதங்களாக நூறு நாள் வேலை செய்த ஏழை பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
- தமிழக ஏழை மக்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டுவருவதாகவும் இதன்போக்கை கைவிட வலியுறுத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்காக 2023-2024ம் ஆண்டிற்கான நிதியை 33 சதவீதம் மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்தும், நிதி குறைக்கப்ப ட்டதால் பெரும்பாலான ஏழை பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினர்.
3 மாதங்களாக நூறு நாள் வேலை செய்த ஏழை பொதுமக்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழக ஏழை மக்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டுவருவதாகவும் இதன்போக்கை கைவிட வலியுறுத்தினர்.
இதற்கு முன்னதாக வட்டாரத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில பொருப்பாளர் மாரி தஷ்ணாமூர்த்தி, பொன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாதவன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
முடிவில் பொருளாளர் நன்றி கூறினார்.
- மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.
- மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது மாவட்ட கலெக்டராக ஏ.பி.மகாபாரதி நேற்று பொறு ப்பேற்றுக்கொண்டார்.
புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சரும், தலைமைச் செயலாளரும் அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
குறிப்பாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.
தமிழக அரசுக்கு நற்பெயரும் மாவட்ட மக்களுக்கு நன்மையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவேன்.
சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், நீர் வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும்.
- சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற ஸ்தலமாக தலபுராணம் கூறுகின்றது.
இத்தலம் திருச்செந்தூ ருக்கு நிகராக போற்றப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனதெரிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற ஸ்லமாதலால் இங்கு வழிபடுபவருக்கு தீரா பழி நீங்கி, மனதெரிவு, சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அதிகாலை முதல் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா ஆகியோர் செய்துயிருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
- மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடை பெற்றது.
- சட்டநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகுகாவடி, கரகங்களுடன் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
மயிலாடுதுறை:
குத்தாலத்தில் மகா மாரியம்மன் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் பால்குட திருவிழா நடந்தது.
முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து புறப்பட்ட பால்குடங்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது.
சீர்காழி தேர் தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதிவிழாவையொட்டி பக்தர்கள் சட்டநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகுகாவடி, கரகங்களுடன் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.
இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.
இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






