என் மலர்
மயிலாடுதுறை
- சார்பதிவாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களை பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும், பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்ச உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப் பட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார்.
இளையபெருமாள் வெங்கடேஷ் பால சரவணன் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலக சங்கத்தினர் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
- பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.
- மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 192 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் தானே புயல், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் உள்வாங்கி சேதமடைந்தது.
கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.
இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றார்.
மேலும் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வும், துறைமுகத்தில் கண்கா ணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டு மென்றும்,கட்டுமானப் பணிகளை தரமாக செய்யவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜூவ், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கல்லூரி முன்பு குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரகோரி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
- அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி என்கின்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமும், பக்தர்கள் அழகு காவடிகள் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூரை நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு 18-ந்தேதி இரவு நடைபெற உள்ளது.
அன்று திருத்தேர்பவனி, அலகு காவடிகள் ஊர்வலமும் மாலை பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் எனும் ஆகம வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
- அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து சீர்காழி தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு சிறிய வாகனம் மற்றும் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடிக்க பாம்பு பிடி கருவி வழங்கிட வேண்டும் என நிலைய அலுவலர் ஜோதி கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று உபகரணங்கள் வாங்கிட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்பு சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதை குறித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு ரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதை ஆய்வு செய்து, பணிகளை தரமாக செய்திட ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.
மேலும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்திட வருங்காலங்களில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் சீர்காழி நகராட்சியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் வாசுதேவன் மற்றும் நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பழைய பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்பழகன், ஒப்பந்ததாரர் விஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தருமை ஆதினம் 27ஆவது ஸ்ரீலதி குருமகா சந்திதானம் அருளாசிடனும் ஆட்சியன்றக் குழுக தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆலோசனையின் படியும் தொடக்கப்பள்ளியின் 38-வது ஆண்டு விழா நடைபெற்றது.
ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர் பேராசி ரியர் முருகேசன் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் ஞானசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவதாஸ் கலந்துக்கொண்டார். முதல்வர் சரவணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். சிறப்புரையில் மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சி, பணிவு, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த குணங்கள் மாணவர்களிடம் இருந்தால் அனைத்து செல்வங்களும் அவர்களை தேடி வரும் எனகூறினார்கள்.
பொறுப்பாசிரியை லதா தொடக்கப்பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்கள்.
இலக்கிய மன்ற விழாவில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஆண்டு விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாடு களை இருபால் ஆசிரியர்கள், அலுவலகள் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சசிகலா நன்றி கூறினார்.
- மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருக்கடையூரில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன்களை முற்றிலுமாக புறக்கணித்ததாக குற்றம் சாட்டி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் நகலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பட்ஜெட் நகல் எரிப்பதை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைப் போல் திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- பக்தர்கள் கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலா.
- பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் பழமை வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் 64-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையில் இருந்து கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலாவாக, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.
கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
இதில் விழா குழுவினர், தெருவாசிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
- அவரது அண்ணன் குணசேகரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
- அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் ஆஜரானதும் தெரிய வந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கி ளில் எதிரே வந்தவர் இறந்து விட்டார்.
இது தொடர்பாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் குணசேகரன் (வயது 43) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் வந்ததின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வழுதலைக்குடி பகுதியை சேர்ந்த அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் உண்மை என தெரிய வந்தது.
அதனை அடுத்து அண்ணன் குணசேகரனை கைது செய்து அதற்கு துணை போன வக்கீல் குமாஸ்தா திருஞானம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
- திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.
சீர்காழி,:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.
கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.
இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.
- சீர்காழியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
- நீர்வள ஆதார துறை பணி ஆய்வாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் ராஜாராமன் ஆகியோர் வேளாண் துறை திட்டங்களை விவசாயிகளுக்கு கூறினர்.
சீர்காழி:
சீர்காழி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாணகிரி, தென்னாம்பட்டினம், புதுத்துறை, செம்மங்குடி, தில்லைவிடங்கன், அத்தியூர், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் மற்றும் கன்னியாகுடி ஊராட்சியில் பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தென்னம்பட்டினம் ஊராட்சியில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்புரை கூறினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சரளா, ஒன்றியக்குழு உறுப்பினர் நிலவழகி சிறப்புரை ஆற்றினார்கள்.
வேளாண்மை துணை இயக்குனர் (விதை ஆய்வு) சித்ரா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை அலுவலர் கிருத்திகா, கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், நீர்வள ஆதார துறை பணி ஆய்வாளர் ஜெயசீலன், விதை ஆய்வாளர் முருகராஜ், உதவி பொறியாளர் ராஜாராமன் ஆகியோர் வேளாண் துறை திட்டங்களை விவசாயிகளுக்கு கூறினர்.
விழா ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பார்கவி, ராஜசேகர், சௌந்தர் ஆகியோர் டி.வி.எஸ்.நிறுவனம் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், விசை தெளிப்பான் மற்றும் விதைப்பு கருவி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார்.






