என் மலர்
மயிலாடுதுறை
- மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திவர் கைது செய்யப்பட்டார்.
- 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வள்ளலார் கோவில் முன்பு மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்திய போலீசார் அவரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதை கலந்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் குத்தாலம் ராஜகோபாலபுரம் மந்தக்கரை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசாந்த் (வயது26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி திருஞானசம்பந்தர் இசை பள்ளி வழங்கிய 6ம் ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
நாட்டியாஞ்சலி விழாவிற்கு அதன் தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.
உப தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் நடராஜ. சட்டையப்பன், உபசெயலாளர் மணிகண்டன், பொருளாளர் கடவாசல் சத்துரு ஹன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் தருமை. சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து சீர்காழி, சிதம்பரம் ,சென்னை, பெங்களூர், கோவை, கும்பகோணம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நாட்டிய நிகழ்வு களை நடத்தினர். திரளான பக்தர்கள் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி கண்டு ரசித்தனர்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பபட்டது.
- விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளைய டிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில், மணக்குடி பொறையன் கோயிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைய டிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட தனிப்படைப்பு போலீசார் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் உண்டியல் கொள்ளை போன கோயில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கீழப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் வடிவேலு (24) பாபு (23) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
. விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள 10 மேற்பட்ட கோவில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 4000 ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மாயூரநாதர் பெரிய கோவிலில் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.
- மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினர், பெங்களூரு வைஷ்ணவி நாட்டியஷாலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ஸ்ரீ சாய் ந்ருத்யாலயா குழுவினரின் வள்ளலார் அருள் பெருஞ்ஜோதி நாட்டிய நாடகம் நடைபெற்றது.
சிங்கப்பூர் கதக்கர்ஸ் கதக் குழுவினரின் சிவனும் பார்வதியும் உலகை உருவாக்குதல் கதக் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோன்று சிதம்பரம் மஞ்சுபாஷினி, சாருவர்தினி குழுவினர் மற்றும் பெங்களூரு விந்தியா அகாடமி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர் இதில் தலைக்கவசம் மற்றும் வாகன காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.
மேலும் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தில் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.
சீர்காழி நகர்பகுதியில் மட்டும் 150 இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணம் மற்றும் காப்பீடு, தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.
- கைபந்தாட்ட போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
- ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீர்காழி:
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.
19 வயது பிரிவில் ஆண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கோகுலன், அரிஷ் குமார், ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
இதேபோல் 17 வயது பெண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட பாவனா, பிரியதர்ஷினி இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவின் வசந்த்ஜபேஷ், அனுஷாமேரி, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் அபிரகாம் மற்றும் பெற்றோர்கள் ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகளை கோப்பைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
பள்ளியில் அனைத்து மாணவ, மாணவகளும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் போது பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், ஆங்கில ஆசிரியர் ரெங்கநாதன் உடனிருந்தனர்.
- நாட்டிய கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த அபயா ம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது.
சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் நிறுவனர் பரணிதரன், ஏ ஆர் சி விஸ்வநாதன், ஏ பி சி செந்தில்வேலன், நிகழ்ச்சி யின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
- அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே தலச்சங்காடு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 61).ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் மல்லேஸ்வரர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த மகாலிங்கத்திற்கு கலாவதி என்ற மனைவியும், ரேணுகா, ஹேமா, கிருத்திகா என்ற 3 மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
- கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம் மாதானத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் கால்நடை சிகிச்சைக்கு வந்து செல்பவர்கள் அச்சத்துடன்வருவதோடு, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களும் பாதுகாப்பின்றி பணியாற்றும் சூழல் நிலவிவந்தது.
இதனையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுவந்த நிலையில் அதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.47லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கால்நடை மருத்துவர் மணிமொழி தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவிசெய ற்பொறி யாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜான்டிரோஸ்ட், மாதானம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, திமுக மாவட்ட பிரதிநிதியும், ஒப்பந்ததாரருமான வேட்டங்குடி இளங்கோவன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பூமிபூஜையில் பங்கேற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பணிகளை துரிதமாக செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
- மயிலாடுதுறை குத்தாலத்தில் மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
- மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசின் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான தமிழ் வழி போட்டி தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.
- விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ரஜினி:-
கொண்டத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். பாகசாலை ஊராட்சி ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.
தேவிகா:-
இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெரு, சிவன் கோயில் தெருவிற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.
முத்துலட்சுமி:-
விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
ஜெயந்தி:-
தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரில் அனைத்து தெருவிற்கும் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
ராணி:-
முடிகண்ட நல்லூர் வண்ணாங்குளத்தில் படித்துறை கட்டித்தர வேண்டும். ராஜா தெரு மற்றும் திருச்சம்பள்ளி முதலியார் தெருவில் தார் சாலை அமைத்து தர வேண்டும். சொந்தக் கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கிருபாவதி:-
நல்லாடை ஊராட்சி பனங்குடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பொறியாளர் முத்துகுமார், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.
அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.
இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.
அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.
அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.






