என் மலர்
மயிலாடுதுறை
- தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கினர்
- இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று (23.02.2023) நடத்திய தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. இன்று (23.02.2023) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள். என்ஜின் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் இத்தாக்குதலில் காயமடைந்த ஐந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல் அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
நமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
- ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
- கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.
தரங்கம்பாடி:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லெட்சுமி, செம்பை ஒன்றிய அமைப்பாளர் ராஜாபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலைத்திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.
- புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆறுமுகம் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள வயலில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.
- முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
- அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் விழா 2022-23 நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்–கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சொ.சசிகுமார் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.திருநாராயணசாமி மற்றும் துறை பேராசிரி–யர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வி.சுரேஷ் முனைவர் எம்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- 8அடி நீளம்கொண்ட பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.
- அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.
சீர்காழி:
சீர்காழி அருகே செம்மங்குடியில் அரவிந்த் என்பவரின் வீட்டு பின்புறம் அமைத்திருந்த வலையில் 8அடி நீளம்கொண்ட மஞ்சள் சாறை பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.இதனால் அப்பகுதிக்கு செல்லவே அப்பகுதியின் அச்சம் அடைந்து புளிச்சகாடு பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரர் தினேஷிடம் தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற தினேஷ் வலையில் சிக்கியிருந்த 8அடிநீள பாம்பினை அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு லாவகமாக மீட்டு ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
- பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம், செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
- சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்ட உயிர் உரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செயல்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார்.
வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், வேளாண்மை உதவி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் வரவேற்றார். சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் கண்டு களித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.
- 22 அணிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
- ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியின்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலைப்பண்பாட்டுத் துறையுடன் இணைந்து மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி நிகழ்த்திய இவ்விழாவுக்கு, நாட்டியப்பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.
விழாவில், கல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 22 அணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்,
இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், வணிகர் சங்க பிரமுகர் ஏடிஎஸ்.தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ரியாத், ஜம்புகென்னடி, சூர்யா, நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பரத நாட்டியக் கலைஞர்களை பாராட்டினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
- செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
- அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் 5-ம் நாளில் மாவட்டத்தில் முதன்முறையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் டாபர்மென், லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர், ஸ்பிட்ஸ், போமரேனியன் உள்பட பல வெளிநாட்டு நாய்களும், சிற்பி பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட உள்நாட்டு நாய்களும் கலந்து கொண்டன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நமக்கு அதிகமான மனஅழுத்தம் இருக்கும்போது செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
இக்கண்காட்சி மயிலாடுதுறையில் முதன்முதலாக மிக குறுகிய காலத்தில் நாய்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றார்.
கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், சிறந்த 10 செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் சிறப்பு செய்தனர்
இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது.
- இறைச்சிகழிவுகள், இறந்த விலங்கினங்கள், நெகிழி பொருட்கள் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம்,கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் 20கிராமங்களின் சேகரிக்கப்படும் ஊராட்சி குப்பைகள்,கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு நீர்நிலை மாசுஏற்பட்டுவந்தது.
மேலும் அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியது.
நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு வழக்குரைஞர் அறிவிப்பானையை ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பினார்.
அதன்பின்னர் நீர்நிலை அருகே குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வளஆதாரத்துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாலும், 2ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குப்பைகளை மக்கும்குப்பை,மக்காத குப்பை என தரம்பிரித்து எடுத்து சென்று கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யாமல் பொதுமக்கள் கூடும் இடங்கள்,குடியிருப்புகள்,பள்ளிகள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.
குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள்,இறந்த விலங்கினங்கள்,நெகிழி பொருட்களும் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்,சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இரண்டு ஊராட்சிகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குவித்து வைக்காமல் மாற்று இடம் தேர்வு செய்து தரம்பிரித்து கொட்டிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.
- அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ மயான கொள்ளை விழா மாசி மாதம் அம்மாவாசையான நேற்று நடைபெற்றது.
விழாவின் போது பக்தர்களால் வழங்கப்படும் வேகவைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு மயானக் கொள்ளை விழா பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான மகாசிவராத்திரி உற்சவம் மயானக்கொள்ளை விழாவை யொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்ட்டது.
தொடர்ந் பரிவார தெய்வங்க ளுடன் சிறப்பு அலங்கா ரத்துடன் அங்கா ளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலாக் காட்சி நடை பெற்றது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.
அப்போது மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த சவாரிகட்ட கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் வாரி இரைக்கும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கோபி ராஜேந்திரன் செய்திருந்தனர்.
- இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறால் வளர்ப்பு சங்க கூட்டம் பைபாஸ் சாலையில் நடந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாண்டி பாலா மாநில பொருளாளர் கிரி மாநில துணை தலைவர்கள் சேதுராமன், சங்கர் பிள்ளை, இரவிப்பாண்டியண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
மாநில செயற்குழு கூட்டத்தில் இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் இறால் வளர்க்கும் உரிமையா ளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்த விலையில் தரமான இறால் தீவனம் வழங்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி மயிலாடுதுறை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஞானம் அரவிந்தன் சாய் பாஸ்கரன் கார்த்திகேயன் அக்பர் சேகர் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்லப்பா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், கடலூர் வெங்கடகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கலியபெரும்ள் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் சாய் பாஸ்கரன் நன்றி கூறினார்.






