search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheap"

    • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
    • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆறுமுகம் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள வயலில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

    • தக்காளி விலை குறைவால் போட்டி போட்டு வாங்கி செல்லும் பொதுமக்கள்.
    • ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    நாமக்கல்:

    தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், மணப்பாறை, கரூர், தொட்டியம், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் விளைச்சல் சரிவால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக சரிவடைந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.

    இதனால் விவசாயிகள் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க குறைவான விலைக்கு கிலோ ரூ.5-க்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் விவசாயிகள் கிலோ ரூ.10, 12 என்ற விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

    சாலையோரங்களிலும், வீதி, வீதியாக சென்றும் ஒரே நாளில் 600 கிலோ வரை தக்காளியை விற்கின்றனர். நாமக்கல் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் சரக்கு வாகனங்களில் தக்கா ளியுடன் முகாமிட்டுள்ளனர்.

    இது குறித்து வியாபாரி கள் கூறுகையில், தக்காளி விளைச்சல் வரும் அக்டோபர் மாதம் வரை அதிகரித்து காணப்படும். ஒரு செடியில் 10 பழங்கள் காய்த்தால், தற்போது 30 பழங்கள் வரை காய்க்கும் பருவமாகும். இதனால் விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் மொத்த மாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று 4 கிலோ ரூ.50 என விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

    • இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படியான விலை கிடைக்கவும் மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ. தாஜூத்தீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மீன்பிடி தடைக் காலத்தால் போதிய அளவு பலன் இல்லாமல் உள்ளது.

    தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு போன்ற ஏற்றுமதி வகைகளை உரிய விலைக்கு விற்க முடியாதபடி, இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்குவதால் மீனவர்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படி யான விலை கிடைக்கவும், மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே விசைப்படகு தொழில் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே, மானியத்தை கூடுதலாக்கி தர வேண்டும். வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்து, அருகாமையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் போல் ஐந்து நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து வர அனுமதி வழங்க வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படு வதுடன், மீனவர் வாழ்வாதாரம் உயரும். எனவே அமைச்சர் மற்றும் ஆணையர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×