search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
    X

    தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

    • இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படியான விலை கிடைக்கவும் மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ. தாஜூத்தீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மீன்பிடி தடைக் காலத்தால் போதிய அளவு பலன் இல்லாமல் உள்ளது.

    தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு போன்ற ஏற்றுமதி வகைகளை உரிய விலைக்கு விற்க முடியாதபடி, இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்குவதால் மீனவர்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படி யான விலை கிடைக்கவும், மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே விசைப்படகு தொழில் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே, மானியத்தை கூடுதலாக்கி தர வேண்டும். வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.

    தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்து, அருகாமையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் போல் ஐந்து நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து வர அனுமதி வழங்க வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படு வதுடன், மீனவர் வாழ்வாதாரம் உயரும். எனவே அமைச்சர் மற்றும் ஆணையர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×