என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
    X

    சீர்காழியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

    • சீர்காழியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
    • நீர்வள ஆதார துறை பணி ஆய்வாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் ராஜாராமன் ஆகியோர் வேளாண் துறை திட்டங்களை விவசாயிகளுக்கு கூறினர்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாணகிரி, தென்னாம்பட்டினம், புதுத்துறை, செம்மங்குடி, தில்லைவிடங்கன், அத்தியூர், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் மற்றும் கன்னியாகுடி ஊராட்சியில் பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தென்னம்பட்டினம் ஊராட்சியில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்புரை கூறினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் சரளா, ஒன்றியக்குழு உறுப்பினர் நிலவழகி சிறப்புரை ஆற்றினார்கள்.

    வேளாண்மை துணை இயக்குனர் (விதை ஆய்வு) சித்ரா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை அலுவலர் கிருத்திகா, கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், நீர்வள ஆதார துறை பணி ஆய்வாளர் ஜெயசீலன், விதை ஆய்வாளர் முருகராஜ், உதவி பொறியாளர் ராஜாராமன் ஆகியோர் வேளாண் துறை திட்டங்களை விவசாயிகளுக்கு கூறினர்.

    விழா ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பார்கவி, ராஜசேகர், சௌந்தர் ஆகியோர் டி.வி.எஸ்.நிறுவனம் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

    விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், விசை தெளிப்பான் மற்றும் விதைப்பு கருவி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார்.

    Next Story
    ×