என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
    • இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.

    ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.

    ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.

    இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.
    • 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்ட ளை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்குகள் மற்றும் 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைக்கு பிறகு சங்குகள் மற்றும் கலசங்கள் அடங்கிய புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுப்பிரமணியசாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    TNJ0112052023: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஒட்டி சென்றார்.திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நட

    சீர்காழி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நடத்துனராக பணியாற்றினார்.

    அந்த பஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை சாலையோரம் கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அரசு பஸ் அதிவேமாக மோதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் விஜயசாரதி உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் சிதம்பரம் எம்.கே.தோட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 39), கடலூர் சேத்தியாதோப்பு வெய்யலூரை சேர்ந்த பத்மநாபன் (35), அருள் ராஜ் (16) என்பது தெரியவந்தது. இதில் பத்மநாபன், அருள்ராஜ் தந்தை-மகன். இவர்கள் அனைவரும் கோவிலில் கச்சேரி நிகழ்ச்சி செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

    முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
    • திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் இரா.முருகன், கே.சசிக்குமார்,மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், பேரூர் கழகச் செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் என்.செல்வம் சிறப்புறையாற்றினார்.

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என வாக்குவாதம்.
    • இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்தி ரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனராம். இதில் சுயநினைவிழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசைவற்று கிடந்துள்ளார்.

    இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    தகவல் இந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் பாஸ்கரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது பணியாளர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் திரளான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

    • ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

    எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • குளத்தை சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து 9 -வது வார்டில் தாடளான் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை கலைஞர் நகர்புற

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குளத்தை சீரமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

    குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).

    இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×