மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது. 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.
மண்டலாபிஷேக பூர்த்தி விழா
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்ட ளை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்குகள் மற்றும் 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைக்கு பிறகு சங்குகள் மற்றும் கலசங்கள் அடங்கிய புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுப்பிரமணியசாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com