என் மலர்
மயிலாடுதுறை
- ரெயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
- இணையத்தில் ரெயில் பயணிகள் 13 லட்சம் பேர் ஒரு நாளுக்கு பதிவு செய்கின்றனர்.
சீர்காழி:
சீர்காழி ச.மு.இ மேல்நிலை ப்ப ள்ளியில் இந்திய இரயில்வே யின் எழுச்சிமிக்க பயணம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.
தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அலுவலர் ஆர்.ஞானம்,உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கே.கஜேந்திரன்,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.ராஜராஜன்,ஜி.மார்க்ஸ்பிரியன் முன்னிலை வகித்தனர்.
இதில் ,திருச்சிராபள்ளி தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிக்குமார் பங்கேற்று பேசுகையில் ரயில்வேத்துறை மிகப்பெரிய நிர்வாகத்துறையாக செயல்படுகிறது.
நாட்டில் நாள் ஒன்றுக்கு 22ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.
ஐஆர்டிசி இணையத்தில் ரயில் பயணிகள் 13லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பதிவு செய்கின்றனர்.
திருச்சி தென்ன ரயில்வேயில்13 மாவட்டங்களில் 9ஆயிரத்து 151பேர் பணியாற்றுகின்றனர். ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளது.
அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே விதிமுறைகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்,எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துசெல்வது சட்டப்படி தண்டனைகுரியது.
அதேபோல் ரயில் தண்டவாளங்களில் சிறுவர்கள் கற்களை வைத்து விளையாடக்கூடாது.
ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதே தவறுதான். ரயில்கள் முன்பு செல்பி எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்றவற்றை தவிர்க்கவேண்டும் என்றார.
முன்னதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் முஸ்தபா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
- பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.
- போலீசார் அவர்களை கைது செய்து, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் பூட்டியிருந்த நேரத்தில் அங்கு வந்த 2 பேர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.
இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் 2 நபர்கள் பேட்டரிகளை திருடி செல்வது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பேட்டரிகளை திருடி சென்றவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்து மற்றும் விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்பது தெரிந்தது.
உடனடியாக போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து, திருடிச் சென்ற பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- தொடர்ந்து, கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபய பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாத சுவாமி பெரிய திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருக்கோயில் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பாக கணபதி பூஜை செய்து பாராம்பரியத்துடன் தெற்கு கோபுர வாசல் திறப்பு விழா 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்து அவ்வழியே நுழைய விட்டு கோயிலை அடைந்தது.
இந்நிகழ்ச்சியில் பாடசாலை தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதினம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர்வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார்உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் தொழிற்சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மண்டல சங்க செயலாளர் தம்பிதுரை, கவுன்சிலர் செயலாளர் வீரமணி, சிறப்பு தலைவர் முத்தையன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.
- திடீரென கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தாக்குதலில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் ( வயது 40).
இவர் நேற்று இரவு கொள்ளிடத்திலிருந்து மகேந்திர பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆரப்பள்ளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிவபாலன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
உடனே காரில் இருந்து மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை அரிவாளால் தாக்கினர். சிவபாலனும் திருப்பி தாக்கியுள்ளார்.
இதில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலச்சந்திரனை கைது செய்தனர். செல்வமணிக்கும் சிவபாலனுக்கும் கடந்த 4 வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதனால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜை நடந்தது.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கழனிவாசல் கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜையை சிவசிதம்பரம் குடும்பத்தார்கள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கல்யாணசுந்தர குருக்கள் நடத்தினார்.
அதன் பின்னர், பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரத்தை வந்தடைந்தனர்.
பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக பணிகளுக்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் குலோத்துங்க சோடியன், டெல்லியை சேர்ந்த சந்திரசேகர், ராணுவதுறை உதவி செயலாளர் தேன்மொழி சந்திரசேகர், ஆசிரியை வனிதா குலோத்துங்க சோடியன், மாதவன் உள்ளிட்ட பக்தர்கள் உபயம் செய்தனர்.
விழாவில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம், குருக்கள் ரமணி, கோவில் பூசாரி கலியமூர்த்தி, நாட்டாமைகள், கிராமமக்கள், மகளிர் சுய குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
- இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.
சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
- ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.
சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.
இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வாங்கி கொடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே செம்பத னிருப்பு அல்லிவிளாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைப்பெற்றது.
விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலனை கருதி சுகாதார கேடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்த வேண்டும் என்று நோக்கத்தோடு முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வாங்கி கொடுத்தனர்.
விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ராஜீவ் காந்தி, பாலமுருகன், இளையராஜா, அருள், ராஜகுரு, வினோத், அமிர்தலிங்கம், உத்திராபதி, செல்வ சுந்தரி, கோமதி, விஜயலட்சுமி, சுமித்ரா, சுகுணா, மற்றும் சக மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- மயிலாடுதுறையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சேலம் சென்றடைகிறது.
- மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து மதியம் புறப்பட்டு இரவு மயிலாடுதுறை வந்தடைகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம் , ரயில்வே துறை முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு மயிலாடுதுறை முதல் சேலம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து, புது தில்லி முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மயிலாடுதுறை எம் பி ராமலிங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, 13.5.2022, 29.11.2022 தேதிகளில் எனது கடிதத்தில் கீழ்கண்டவாறு வலியுறுத்தி இருந்தேன்.
எனது மயிலாடுதுறை தொகுதி பயணிகள், நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவையை கோரி வருகின்றனர்.
இந்த சேவையை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ்,திருச்சி-கரூர் எக்ஸ்பிரஸ் கரூர்-சேலம் எக்ஸ்பிரஸ் இணைக்கப்பட வேண்டும் எனவும், இதே கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நாமக்கல் ஏ.கே.பி சின்ராஜ் ஆகியோரும் வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கடந்த மாதம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அந்த ரயில்களை இணைக்கும் திட்டத்தை அனுப்பியுள்ளது.
பயணிக்கும் பொதுமக்க ளின் நலன் கருதி உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது சம்பந்தமாக உங்கள் முன்கூட்டிய சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் தனது கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து, கோரிக்கை ஏற்கப்பட்டு, தெற்கு ரயில்வே வெளியிட்டு ள்ள அட்டவணையில் தெரிவித்திருப்பதாவது:
மயிலாடுதுறையில் காலை 6:20 க்கு புறப்பட்டு குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெரு மாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, அய்ய ம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, மதியம்1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதேபோல் மறு மார்க்கமாக, சேலத்தில் மதியம் 2.05மணிக்கு, புறப்பட்டு இரவு 9.40மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது.இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்டு ள்ள அட்ட வணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு, நாமக்கல் வழியாக நேரடியாக இயக்கப்படும் விரைவு ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் அளித்த ரயில்வே துறைக்கு நன்றியையும், விரைவு ரயில் இயக்கத்திற்கு வரவேற்பையும் எம். பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
- கடைவீதி சாலையில் ஒரு வாலிபர் அமர்ந்து இருந்தார்.
- திடீரென அவர் பிளேடால் தன்னை அறுத்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சாலை ஓரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று அமர்ந்து இருந்தாா்.
அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடால் அவரின் மார்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியை தானே அறுத்துக் கொண்டார். இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர் அருகில் யாரும் செல்லவில்லை.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் இருந்து பிளேடை நைசாக பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அவரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்த பழனிசாமி என தெரியவந்தது.
இவர் ஏன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்? என தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
- 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அங்கு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.






