என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது
    X

    முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது

    • திடீரென கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தாக்குதலில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் ( வயது 40).

    இவர் நேற்று இரவு கொள்ளிடத்திலிருந்து மகேந்திர பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஆரப்பள்ளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிவபாலன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனே காரில் இருந்து மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை அரிவாளால் தாக்கினர். சிவபாலனும் திருப்பி தாக்கியுள்ளார்.

    இதில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலச்சந்திரனை கைது செய்தனர். செல்வமணிக்கும் சிவபாலனுக்கும் கடந்த 4 வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதனால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×