கோபுர கலசங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்வு

123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன.
கோபுர கலசங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கோபுர கலசங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்திபெற்ற மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், சுவாமி- அம்பாள் கருவறை கோபுரங்கள், பரிவார தேவதைகள் கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர் 3-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மோதாளங்கள் முழங்க மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. இதில் திருவாவடுதுறை கட்டளை தம்புரான் வெள்ளப்ப சுவாமிகள், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com