மின்கம்பியில் சிக்கி மயில் இறந்தது

பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
இறந்து கிடக்கும் மயில்.
இறந்து கிடக்கும் மயில்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.

சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.

இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.

மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com