என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் பகுதியில் உள்ள ஞானவிநாயகர், ஆகாச அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் ஞானவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது. அன்று முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து ஆலய விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குத்தாலம் தாலுகா பேராவூர் ஊராட்சி கத்திரிமூலை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு ஆகாச அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்களின் முயற்சியால் பலஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது.

    குடமுழுக்கை விழா கடந்த 9-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டது. குடமுழுக்கு தினமான நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மஹாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் குடமுழுக்கு நடைபெற்றது.

    இதேபோல பரிவார தெய்வங்களான பதினெட்டாம்படி கருப்புசாமி, மதுரைவீரன் மற்றும் கேதாரகவுரி அம்மனுக்கு புதுப்பீடம் அமைத்து அஷ்டபந்தன மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கத்திரிமூலை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 138.50 அடியை எட்டியபோது கடந்த மாதம் 29-ந் தேதி அணை பகுதிக்கு சென்ற கேரள அமைச்சர்கள் 2 ‌ஷட்டர்களை திறந்து தண்ணீரை இடுக்கி மாவட்டத்துக்கு வெளியேற்றினர். அதன் பிறகு அடுத்தடுத்து 5 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு 3000 கன அடிக்கு மேல் வீணாக தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டாமல் குறைக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசை கண்டித்தும் தமிழக உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் போராட் டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அணையின் நீர் மட்டம் 139 அடியை எட்டாமல் இருந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் தற்போது 138.95 அடியாக உள்ளது. அணைக்கு 1897 கன அடி தண்ணீர் வருகிறது.

    நேற்று வரை 1852 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 933 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீர் இருப்பு 6861 மி. கன அடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 69.27 அடியாக உள்ளது. இதனால் 58-ம் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அணைக்கு வினாடிக்கு 2684 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று 3069 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1000 கன அடி குறைக்கப்பட்டு 2069 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5647 மி. கன அடியாக உள்ளது.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாசன குளங்கள் மற்றும் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    மயிலாடுதுறையில் கோவில் இரவு காவலர் கொலை குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு காவிரி கரையோரம் அமைந்துள்ள படித்துறையில் விஸ்வநாதர் கோவிலில் கடந்த மே மாதம் 8-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது, கோவிலில் இரவு காவலராக இருந்த சாமிநாதன் (வயது 55) என்பவர் அந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். அந்த சம்பவத்தில் காயமடைந்த சாமிநாதன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 6 மாதமாக குற்றவாளியை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவு இருந்தும் குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவிலில் கொள்ளையடித்து விட்டு இரவு காவலரை கொன்ற குற்றவாளி படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் உள்ள குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டரை 9442003309 என்ற எண்ணிலும், சப்-இன்ஸ்பெக்டரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில, டுவிட்டரில் படங்களை வெளியிட்டு பி.சி.சி.ஐ. தேர்வு குழுவுக்கு பதில் அளித்துள்ளார் சஞ்சு சாம்சன்
    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது.

    நியூசிலாந்து அணி வருகிற 17-ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார்.

    இந்த தொடரில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சன்

    இந்திய டி20 அணிக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    அணியில்  கே.எல். ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    சஞ்சு சாம்சன்

    இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் #JusticeForSanjuSamson என ஹேஷ்டேக்கை உருவாக்கி, ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னால் சிறப்பான வகையில் பீல்டிங் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை என்று தேர்வுக்குழு உறுப்பினர்களை கேள்வி கேட்கும் வகையில், தனது அபாரமான பீல்டிங் படங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    குத்தாலம் அருகே கோவிலில் தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஏ.கிளியனூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி அர்ஜூன் கதவை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் செல்லியம்மன் கழுத்திலிருந்த 4 கிராம் எடையுள்ள 2 தாலிகள், 4 கிராம் மதிப்புள்ள ஒரு பொட்டு என மொத்தம் 1½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
    தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தவர் அக்‌ஷய்குமார். இவர் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி' இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் முன்னால் ஏராளமான விவசாயிகள் திரண்டு அக்‌ஷய்குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷம் எழுப்பினர். சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். தியேட்டர் அலுவலகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். 

    அக்‌ஷய் குமார்

    சூர்யவன்ஷி படம் திரையிடப்படுவதை எதிர்த்து பஞ்சாப்பில் உள்ள உதம் சிங் பூங்காவில் இருந்து திரையரங்கம் வரை கண்டன ஊர்வலத்தையும் விவசாயிகள் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்‌ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்கள் முன்னால் திரண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    ஆட்டுக்குட்டி பால் குடிக்கும்போது பசு எந்தவித எதிர்ப்பும் காட்டுவதில்லை. பாசத்தோடு பால் குடிக்க அனுமதிக்கிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள செருதியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம். இவருக்கு சொந்தமான பசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றது. அதேபோல இவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடு ஒன்றும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குட்டி போட்டுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன்பு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசுவை மாட்டு கொட்டகையில் கட்டி இருந்தனர். அப்போது 2 மாத ஆட்டுக்குட்டி பசுவிடம் பால் குடித்தது. அன்றுமுதல் அந்த ஆட்டுக்குட்டி தனது பசியை போக்கிக்கொள்ள அடிக்கடி பசுவிடம் பால் குடித்து வருகிறது. ஆட்டுக்குட்டி பால் குடிக்கும்போது பசு எந்தவித எதிர்ப்பும் காட்டுவதில்லை. பாசத்தோடு பால் குடிக்க அனுமதிக்கிறது.

    இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும்.
    குழந்தைகள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களிலும், காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து உடலில் சேருவதால் எலும்புகள் வலுப்பெறும்.

    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும். பொதுவாக ஒன்று முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

    இதேபோல் 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 கிராமும், 19 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கு 1000 கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 1,300 கிராமும் கால்சியம் சத்தும் தேவையாக உள்ளது.
    மயிலாடுதுறை அருகே ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மேலபட்டமங்கலம் திடல் தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவருடைய மகன் சதீஷ்(வயது36). பொக்லின். எந்திர டிரைவர். சதீசின் உறவினர் வினோத். இவருக்கும் வழுவூர் நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது வினோத்துக்கு ஆதரவாக சதீஷ் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சதீசுக்கும் மகேஸ்வரியின் உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தீபாவளியன்று மாலை 4.30 மணியளவில் சீனிவாசபுரம் கடைவீதியில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் உறவினர்களான இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சினிமா பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர். அப்போது சதீசுக்கும் இளவரசன் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த இளவரசனின் அண்ணன் மாதவன் மற்றும் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மாதவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று பிரபு, இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சதீசை பிடித்து தாக்கினர். அப்போது மாதவன் கத்தியால் சதீசின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சதீசின் உறவினர்கள் கொலை நடந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சதீசின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தீபாவளியன்று

    இந்தநிலையில் மயிலாடுதுறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சதீஷ் கொலை தொடர்பாக நெய்க்குப்பை வடக்கு தெருவை சேர்ந்த மனோகர் மகன் மாதவன் (33), இவரது தம்பி இளவரசன் (27), நெய்க்குப்பை தோப்புத்தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் பிரபு (38), அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரகு (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் தினேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 30). இவரது மனைவி அருள்மொழி(25). கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிதுரை தனது சொந்த ஊரான வேப்பந்தட்டை தாலுகா நூத்தாப்பூருக்கு சென்றார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அருள்மொழியும் தீபாவளி பண்டிகைக்காக நூத்தாப்பூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்த மகாலட்சுமி, சாமிதுரை வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சாமிதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது. நகைகளை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததால், அவை தப்பின. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் முருகன் (வயது 25). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முருகனின் தாய் ஜோதி தரைக்கடை போட்டு புடவை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த முருகன் தனது தாய் ஜோதியிடம், வியாபாரம் செய்ய உதவி செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அவரது தாய் ஜோதி வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற முருகன், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னையில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 07 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 10,745 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,05,832 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,012 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 60 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,204 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ×