என் மலர்tooltip icon

    மதுரை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1,100 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விட இருக்கின்றன.
    • 900 வீரர்கள் காளைகளை அடக்க தயாராக உள்ளனர்.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ஜலிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது.

    அதேபோல் காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    • சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன்.

    மதுரை:

    மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆணையர் சஞ்சய் ராய், முதன்மை ஆணையர் வசந்தனர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எனது தாய் முருகனை வேண்டிக் கொண்டு வடிவேலு என எனக்கு பெயர் வைத்தார்கள். ஆனால் நாராயணன் என எனது பெயரை உறவினர்கள் மாற்றினர். அப்போதிருந்து உடல்நிலை சரியில்லாமல் போக எனது தாய் வடிவேலு என்ற பெயரே இருக்கட்டும் என கூறினார். அவரால் தான் தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.

    பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன். அந்த ஆசை இங்கேயே நிறைவேறி விட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கப் போவேன். முன்பெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் மாட்டை அவிழ்த்து விடுவார்கள்.

    மாடு எங்க வருதுன்னு தெரியாது. பின்னால வந்து குத்திட்டு போயிரும். ஆனால் தற்போது கட்டுப்பாட்டோடு மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.

    பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டும். அடுத்தடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சுந்தர் சி யின் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு மாரிசன் படத்திலும் நடித்து வருகிறேன். பிரபு தேவாவும், நானும் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளோம்.

    வருமான வரித்துறை இருக்கிறவங்ககிட்ட வரியை அதிகமாக போட்டு வாங்கிகோங்க... ஏழைகளுக்கு வரியை பார்த்து போடுங்கள்... விஜய் அரசியல், அஜித் கார் ரேஸ் குறித்து பேச விரும்பவில்லை. மாமன்னன் படத்தில் வருவது போல் வாழ்க்கையில் அதிகளவு கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் தான் தற்போது காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்.
    • டெண்டர் விடும் வரை இங்கு சுரங்கம் வரப்போவது யாருக்கும் தெரியாது.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் நிச்சயம் வராது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அண்ணாமலை உறுதியாக தெரிவித்துள்ளார்.

    டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று, பொங்கலுக்கு பிறகு மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

    இந்த இடத்தில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் எங்கேயும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது.

    டெண்டர் விடும் வரை இங்கு சுரங்கம் வரப்போவது யாருக்கும் தெரியாது.

    • சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, " பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது.

    அதனால் சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
    • 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

    இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

    இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

    மேலும், 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இறுதியில், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
    • அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும்.

    மதுரை:

    டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அரிட்டாபட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி மேலூர் பஸ் நிலையத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டங்ஸ்டன் எதிர்ப்பு தொடர்பாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். மீண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது.

    துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்.

    அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரமில்லாத அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. நீண்ட காலமாகவே சங்பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வருகிற சூழலில் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாகவும் குதர்க்க வாதமாகவும் உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு அவருக்கு எதிராக போய் முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம் இந்திய அளவில் பேசப்படுகிற மத வழி தேசியம், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பேசுகிற மதவழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாகவும் இருக்க முடியும்.

    அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணியாற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும். அந்த அரசியலை தான் சீமான் பேசுகிறாரா? என்பதை அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தந்தை பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையின்பால் சில விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வில்லை. தொன்மை காலத்து சொற்களே உள்ளன. தமிழின் தொன்மையை பேசுவதற்காக பெரியார் அதை குறிப்பிட்டு இருக்கிறார்.

    அது காலத்திற்கு ஏற்ப நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும், வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்னதை சிலர் திரித்து பேசுகின்றனர். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அது ஏற்புடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது.
    • 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூா் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. மேலூர் நரசிங்கம் பட்டியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், நடைபயணமாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வெள்ளமென திரண்டு பொதுமக்கள், விவசாயிகள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    இருந்தாலும் மக்களுக்கு அச்சத்தைப் போக்குகின்ற வகையிலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிராம மக்களிடம் எடுத்து கூறி இருக்கின்றோம். நமது திராவிட மாடல் ஆட்சி ஒரு போதும் மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் வருவதற்கு அனுமதிக்காது.

    இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமன்றத்திலே நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.

    தமிழக முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் மக்களின் அச்சத்தை போக்குகின்ற வகையிலே தமிழக முதல்வரின் கருத்தை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.

    நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராமல் இருக்க அத்தனை நடவடிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.

    யார், யார் எதையெல்லாம் வந்து இங்கு சொன்னாலும் இந்த பகுதி மக்களை பாது காக்கின்ற பொறுப்பு எங்கள் கடமை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். டங்ஸ்டன் பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி, மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அ.வல்லாளப்பட்டி, கிடா ரிப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய பகு திகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து டங்ஸ்டன் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாடுகளை எடுத்து ரைத்தார்.

    இந்த பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அருகே கூடல் நகர் ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.35 முதல் மாலை 5.35 மணி வரை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் 9 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை (16848), நாகர்கோவில் - மும்பை (16352), மதுரை-பிகானிர் ரெயில் (22631), நாகர்கோவில்- கோவை (16321), குருவாயூர்- எழும்பூர் (16128), கோவை-நாகர்கோவில் (16322), ஓகா-ராமேஸ்வரம் (16734), மயிலாடுதுறை-செங்கோட்டை, திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ஆகியவை மாறறுப்பாதையில் இயக்கப்படுகிறது.

    இந்த 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15-ந் தேதி (புதன்கிழமை) அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.

    அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது.

    இந்த வரைபடத்தில் 13 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 6 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு ரசிக்க பேருந்து நிலையம், விளக்குதூண் உள்ளிட்ட 4 இடங்களில் அகன்ற திரை (எல்.இ.டி.) மூலம் நேரடி ஒளிபரப்பு வசதி, 10 இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சுமார் 900 காளைகளுக்கு மேல் வாடிவாசலில் அவிழ்த்து விட பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி தகுதி பெறும் காளைகள் அதிகளவில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பாலமேடு பேரூராட்சி நிர்வாகமும், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர்.
    • அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, மேலூர் நரசிங்கம்பட்டி பெருமாள் மலைக்கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து, தமுக்கம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இந்த நடைபயணத்திற்கு, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும், மேலூர் பகுதியில் ஏராளமான கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்த போதிலும் திட்டமிட்டபடி நடைபயணமாக வந்து மதுரையில் போராட்டம் நடைபெறும் என்றும், நான்கு வழிச்சாலையில் நடைபயணமாக அல்லாமல் வாகனங்களில் பேரணியாக மதுரைக்கு செல்வோம் என விவசாயிகள் அறிவித்தனர்.

    அதன்படி மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் நரசிங்கம்பட்டி பகுதியில் திரண்டனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    போராட்டம் தொடங்கி, நரசிங்கம்பட்டியில் இருந்து ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு மதுரை நான்கு வழிச்சாலைக்கு வந்தனர். வெள்ளரிப்பட்டி பகுதிக்கு அவர்கள் வந்தபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.

    ஊர்வலம் அங்கு வந்தபோது, போலீசார், அவர்களை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்க மறுத்து தடுப்புகளை தாண்டி வந்தனர்.

    கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பேரணியாக சென்றதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • மாடுகளை பிடிக்க 5347 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • 12,632 மாடுகள் பங்கேற்க விண்ணப்பம்.

    தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடு அடக்கும் வீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பங்கேற்க விரும்பும் காளைகள் தொடர்பாக அதன் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அலங்காநல்லூரில் மாடுகளை பிடிக்க 1,698 வீரர்கள், அவனியாபுரத்தில் 1,735, பாலமேட்டில் 1,914 வீரர்கள் என மொத்தம் 5,347 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூரில் 5,786 மாடுகள், அவனியாபுரத்தில் 2,026 மாடுகள், பாலமேட்டில் 4,820 மாடுகள் என மொத்தம் 12,632 பங்கேற்க உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யாத வீரர்கள் மற்றும் மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாது.

    ×