என் மலர்
மதுரை
- ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது.
- வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் சாத்தையாறு உபவடி நில பகுதியான ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சுப்புராஜ் தலைமை தாங்கினார். வயல்வெளி பள்ளியின் நோக்கம் மற்றும் வட்டார அளவில் செயல்படும் திட்டங்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகியும், விதை நேர்த்தி பூச்சி அடையாளம் காணுதல், பயிர் கண்காணிப்பு பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியும், தீமை தரும் பூச்சிகளை வயல்வெளிகளில் அடையாளம் காணுதல், பூச்சிக்கொல்லி இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார், வேளாண்மை விரிவாக்க உதவி பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர்.விவசாயி வெங்கடசாமி வயலில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சத்தியவாணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வேளாண்மை துணை இயக்குனர் சுப்புராஜ் நெல்கோ 51 மற்றும் துவரை எல்.ஆர்.ஜி 52 விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர் முத்துபாண்டியன் உடன் இருந்தார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை-நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோ வில் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) டிசம்பர் 23 (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானா மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 2-ம் வகுப்பு பொது பெட்டிகள், மா ற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06041) தாம்ப ரத்தில் இருந்து டிசம்பர் 23 (வெள்ளிக்கிமை) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய 2 அடுக்கு படுக்கை வசதிபெட்டி, 11 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சிங்கம்புணரியில் குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி(வயது50) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம்
ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது. அதுகுறித்து கேட்ட போது சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்தனர். குடிபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை. கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சா விற்ற பணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.
அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை நகரில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 3 பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் பெங்களூரு, ஆந்திரா சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள், 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் தவிர 10-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் உண்டு. இங்கு இருந்து நகர் மற்றும் கிராமங்களுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
மதுரை மாநகர பஸ் நிலையங்களில் பனகல் சாலை, கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இருந்து நாள்தோறும் சுழற்சி அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது மிகக் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அண்ணா பஸ் நிலையம், கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகிய 3 பஸ் நிலையங்களில் பொதுமக்களின் வருகை குறைவு காரணமாக, அவை உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்கள் பராமரிப்பு இன்றி சீர்குலைந்து காட்சி அளிக்கின்றன. அங்கு மினி பஸ்களையே அதிகம் பார்க்க முடிகிறது.
தல்லாகுளம் பனகல் சாலையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இது மதுரை அரசு மருத்துவமனைக்கு மிகவும் அருகில் உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இந்த பஸ் நிலையம் பயனுள்ளதாக இருந்தது.
எனவே அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் மினி பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.
மதுரை அழகர் கோவில் சாலையில் கே.புதூர் பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து மேலூர், அழகர் கோவில் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களை புறப்பட்டு செல்கின்றன.
ஆனையூர் பஸ் நிலையத்தில் இருந்தும் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகரங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அங்கு இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு போனால் அதிர்ஷ்டம் என்ற நிலை தான் உள்ளது. ஆனையூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கான கட்டுமான பொருட்களை சேகரித்து வைக்கும் தளமாக ஆனையூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.
மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதுவும் தவிர உபரி பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
எனவே மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது குறைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
- வாடிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக வன சாலைகள் சீர்குலைந்து காணப்படுகின்றன.
- மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி வழியாக பாலமேடு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இதில் சாத்தையாறு அணை மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி யையொட்டி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது.
அந்த சாலை பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வாடிக்கையாகி வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட வன அலுவலர் குருசாமி தாபாலா, வனச்சரக அலுவலர் வெங்கடேசன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.
மேலும் பல கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட குட்லாடம்பட்டி அருவி 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சீர்குலைந்ததில் அருவிக்கு செல்லும் பாதைகள் படிக்கட்டுகள் சேதமடைந்து புதர்மண்டி இருப்பதை பார்க்காமலும், விராலிப்பட்டியில் இருந்து சிறுமலை மீனாட்சிபுரத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை தொடங்கும் இடம் பற்றி புரிதல் இல்லாமல் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமாலும் அதிகாரிகள் வந்து சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
- கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
- திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று முதல் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த உள்ளூர் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனை வலியுறுத்தி கடந்த மாதம் திருமங்கலத்தில் கடையடைப்பு, போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டக் குழுவினர் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளனர்.
இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று முதல் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத வாகனங்களை அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்தது. இதற்கு டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று காலை வழக்கம் போல் திருமங்கலத்தில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தினால் தான் அனுமதிக்க முடியும் என கூறி பள்ளி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இன்று அரையாண்டு தேர்வு நடப்பதால் அதற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். டிரைவர்கள் பல முறை கேட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் பள்ளி வாகனங்களை அனுமதிக்கவில்லை.
இதனால் டிரைவர்களுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கார், லாரி உள்ளிட்ட மற்ற டிரைவர்களும் அங்கு திரண்டு சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை குறித்து அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து டிவைர்கள் பள்ளி வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். சுங்கச்சாவடி பிரச்சினையில் மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு எழுத செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
- சதீஷ்ராஜா தற்கொலை செய்திருப்பதால், எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவில்லை.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பழங்காநத்தம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்ராஜா (வயது38). போலீஸ்காரரான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சதீஷ்ராஜா நெல்லை மாவட்டம் நாங்குனேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சதீஷ்ராஜா பரிதாபமாக இறந்தார்.
அவரது தற்கொலை குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபழக்கத்திற்கு அடிமையான சதீஷ்ராஜாவை, அதிலிருந்து விடுபட செய்ய அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற செய்தனர். ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை என தெரிகிறது.
இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்ராஜா தற்கொலை செய்திருப்பதால், எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
- நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாட்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டமுடையார் சாஸ்தா கருப்பசாமி கோவில் உள்ளது. எங்கள் கிராமத்தினர் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், இதன் அருகில் உள்ளது. கோவில் திருவிழா நேரங்களில் இந்த பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த நிலத்தின் அருகில் இலவச பட்டா மனை தனிநபருக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது தனிநபர்கள், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து கழிப்பறை, மாட்டு கொட்டகை உள்ளிட்ட தங்களின் சொந்த நிலத்தை போல கட்டிடம் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோவில் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன.
மேலும் இந்த நிலத்தின் வழியாகத்தான் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடத்துவதற்கு செல்லும் பாதையாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு ஒப்படைக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே இதன் அடிப்படையில் மனுதாரர் புகாரை தென்காசி மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருந்தால் அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, அந்த நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
- அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,
பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம்- 143 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.
- இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை அய்யர் பங்களா, ஸ்ரீ நகரை சேர்ந்த டைட்டஸ் தம்பிநாதன் மனைவி சந்திரா (வயது 54). இவர் மதுரை மாநகர குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாத்திமா சமீம் (34), அவரது கணவர் ஜாகிர் உசேன் (40), பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் என்னிடம், நாங்கள் புதிய தொழில் ஒன்றை செய்து வருகிறோம். இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். நீங்கள் செலுத்திய பணத்திற்கான ஆவணங்களை தருகிறோம் என்ற ஆசை வார்த்தை கூறினார்கள். இதனை நம்பிய நான் அவர்களிடம் உறவினர்கள் மூலம் ரூ.70 லட்சம் பணத்தைத் திரட்டி கொடுத்தேன். மேலும் எங்களிடம் இருந்த 143 பவுன் நகைகளையும் அவர்களிடம் கொடுத்தேன்.
பணம், நகையை பெற்று கொண்ட 4 பேரும் பல மாதங்களாகியும் லாபத் தொகை தரவில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.
அப்போது அவர்கள் நான் கொடுத்த பணம், நகைக்கு ஈடாக ஆவணம் ஒன்றை கொடுத்தனர். உங்களது பணம் கூடிய விரைவில் திருப்பித் தருவோம் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பணம், நகையை திருப்பி தராமல் என்னை ஏமாற்றினர்.
இந்த நிலையில் 4 பேரும் பணம், நகையை திருப்பிதர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே போலீசார் உரிய நடவடிக்ைக எடுத்து ரூ.70 லட்சம், 143பவுன் நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரா பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் எதிர் தரப்பிடம் விசாரணை நடத்திய போது, பணம்-நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாத்திமா சமிம், கணவர் ஜாகிர் உசேன், பரமேஸ்வரி, சுரேஷ் ஆகிய 4 பேரை மதுரை மாநகர குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா பங்கேற்றார்.
- 25 அல்ல 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.
மதுரை
பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில் கேசவ விநாயகம் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் வக்கீல் முத்துக்குமார் ராஜா தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. பொருளாதார பிரிவின் மாநில தலைவரும், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி நிறுவனத் தலைவருமான எம்.எஸ்.ஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகம் எங்கும் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் வல்லரசாக பிரதமர் மோடி காட்டியுள்ளார்.
பா.ஜ.க. குடும்ப கட்சி இல்ைல. இங்கு தாத்தா, மகன், பேரன்-பேத்தி, என்று கட்சி தலைவர்கள் கிடையாது. பா.ஜ.க.வில் மட்டும் அனைவரையும் ஜி என்ற மரியாதையோடு அழைக்கப்படுகிறார்கள்.
2024 பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதே சட்டமன்றத் தேர்தலும் வரலாம். அதற்குண்டான ஆயத்தப் பணிகளில் பொரு ளாதாரப் பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை நாம் 25 தொகுதிகளில் வெற்றி வாகை சூடுவோம் என்று சூளூரைத்தார்.
25 அல்ல 39 தொகுதி களிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில் மாநில துணைத்தலைவர்வர்கள் பிரவீன் பால், ரமேஷ், மாநில செயலாளர் முத்துராமலிங்கம், கிருஷ்ண பிரபு, வக்கீல் கவுரிசங்கர், வெங்கடேசுவரன், சிவகாந்தன், ஷீலா ரமணி, தீபா, ராதிகா, துர்கா, ஜோஸ் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் டைடல் பூங்காவுக்கு இடம் கேட்டு மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.
- அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் டைட்டல் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதே போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைட்டல் பூங்கா, 5 ஏக்கரில் கட்டப்படும். இதன்மூலம் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்தபடியாக மேலும் 5 ஏக்கரில் டைட்டல் பூங்கா விரிவுபடுத்தப்படும்" என்று தமிழக அரசு அறிவித்தது.
மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் கலோன் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்ட றிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலம் உள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த நிலையில் டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.
அந்த கடிதத்தில், மாட்டுத்தாவணியில் ஒதுக்கீடு செய்ய உள்ள 5 ஏக்கர் நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் மதிப்பு ஆகியவை தொடர்பான விவரங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.






