search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவர்-அன்னை பாத்திமா கல்லூரி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.ஷா பங்கேற்றார்.

    பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டம்

    • பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா பங்கேற்றார்.
    • 25 அல்ல 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

    மதுரை

    பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில் கேசவ விநாயகம் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் வக்கீல் முத்துக்குமார் ராஜா தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. பொருளாதார பிரிவின் மாநில தலைவரும், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி நிறுவனத் தலைவருமான எம்.எஸ்.ஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகம் எங்கும் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் வல்லரசாக பிரதமர் மோடி காட்டியுள்ளார்.

    பா.ஜ.க. குடும்ப கட்சி இல்ைல. இங்கு தாத்தா, மகன், பேரன்-பேத்தி, என்று கட்சி தலைவர்கள் கிடையாது. பா.ஜ.க.வில் மட்டும் அனைவரையும் ஜி என்ற மரியாதையோடு அழைக்கப்படுகிறார்கள்.

    2024 பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதே சட்டமன்றத் தேர்தலும் வரலாம். அதற்குண்டான ஆயத்தப் பணிகளில் பொரு ளாதாரப் பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை நாம் 25 தொகுதிகளில் வெற்றி வாகை சூடுவோம் என்று சூளூரைத்தார்.

    25 அல்ல 39 தொகுதி களிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில் மாநில துணைத்தலைவர்வர்கள் பிரவீன் பால், ரமேஷ், மாநில செயலாளர் முத்துராமலிங்கம், கிருஷ்ண பிரபு, வக்கீல் கவுரிசங்கர், வெங்கடேசுவரன், சிவகாந்தன், ஷீலா ரமணி, தீபா, ராதிகா, துர்கா, ஜோஸ் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×