என் மலர்tooltip icon

    மதுரை

    • யானை தந்த பொம்மைைய கேரளாவில் இருந்து கடத்தி வந்த 2 பேருக்கு வனத்துறை வலைவீசி வருகின்றனர்.
    • யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மதுரை

    மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது மதுரை ஜெ.ஜெ. நகர் பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அங்கு யாைன தந்த பொம்மைகளை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த இருளன் என்ற முத்து, பாண்டியன் நகரை சேர்ந்த பீட்டர் சகாயராஜ் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாங்கள் இந்த பொம்மைகளை செய்யவில்லை. சாத்தூரை சேர்ந்த ரஞ்சித்ராஜா என்பவரிடம் வாங்கி வந்து கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை சரக வனத்துறை அதிகாரிகள் சாத்தூருக்கு சென்று ரஞ்சித்ராஜாவை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், யானை தந்த பொம்மைகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகரில் விற்பனை செய்து வருவது தெரி வந்தது.

    இந்த சிலைகளை கடத்திவரும் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    யானை தந்த பொம்ைம விற்பனை தொடர்பாக பிடிபட்ட பொன்இருளன், பீட்டர்சகாயராஜ், ரஞ்சித்ராஜா ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா கூறுகையில், மதுரை வன குற்றங்களின் மையமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வன உயிரினங்களை வேட்டையாடுவோர், மயில் இறகு, யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் நாளை ஆய்வு நடக்கிறது.
    • காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் இயக்க வசதிக்காக மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கேரள மாநில எல்லை பகுதிகளில் மின்மய மாக்கல் பணிகள் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலா கிறது.

    இதற்கிடையே நெல்லை -தென்காசி இடையேயான 72 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை நேற்று நடந்தது.

    அதனை தொடர்ந்து நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாச முத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் நாளை (13-ந் தேதி) ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வானது நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.

    பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப்படும். இந்த பணிகள் நாளை மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடிவடையும்படி திட்டமிடப் பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் மின்மயமாக்கல் பணிகளை பொறுத்தமட்டில், விருது நகர்-தென்காசி இடையே 122 கி.மீ. தூரத்துக்கும், தென்காசி-பகவதிபுரம் இடையே 14 கி.மீ. தூரத்துக்கும், எடமன்-புனலூர் ரெயில் நிலைய எல்லை வரையிலான 8 கி.மீ. தூரம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என தெரிகிறது.

    • சி.இ.ஓ.ஏ. கல்விக்குழும நிறுவனர் எழுதிய “எம்மொழியே செம்மொழி” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
    • ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை சி.இ.ஓ.ஏ கல்விக்குழுமத்தின் நிறுவனர் மை.ராசா கிளைமாக்சு எழுதிய "எம்மொழியே செம்மொழி" என்ற புத்தக வெளியீட்டு விழா கோசாகுளத்தில் உள்ள சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பாவாணர் அரங்கத்தில் நடந்தது. சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழத்தின் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை மதுரை யாதவர் ஆண்கள் கல்லூ ரியின் முதல்வர் நாரா யணன் பெற்ற க்கொண்டார். சி.இ.ஓ.ஏ. பதின்மபள்ளி துணை முதல்வர் மஞ்சுளா அறிமுக உரையாற்றினார். மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் தகைசால் பேரா சிரியர் நிர்மலா மோகன் நூலாய்வு உரையாற்றினார். சவுராஷ்டிரா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சித்ரா, அமெரிக்கன் கல்லூரி உதவி பேராசிரியர் எஞ்சலின் தங்கக்கனி ஆகியோர் பேசினர்.

    முனைவர் மை. ராசா கிளைமாக்சு ஏற்புரை வழங்கினார். இந்த விழாவில் சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் நிர்வாகக்குழுவினர், முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    • பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.

    அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் நாள்தோறும் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆவின் சந்திப்பு சாலை, வெளிமாவட்டத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. அதேபோல பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது.

    ஆவின் சந்திப்பு முதல் திருவள்ளுவர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் திரளானோர் 2 மற்றும் 4 சக்கர வாக னங்களில் வந்து செல்கின்றனர். இதனால் வள்ளுவர் சிலை சந்திப்பிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை முதல் ஆவின் ரோடு வரை செல்லும் சாலை குறுகலாக உள்ளது. அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்படு கிறது. மேலும் இந்த சாலை அமைப்பானது போக்கு வரத்து சிக்னல் அமைக்க முடியாத வகையில் உள்ளது. இதன் காரணமாக போலீ சாரால் இந்த சந்திப்பில் போக்குவரத்தை எளிதாக கையாள முடியவில்லை.

    அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப் பட்டிருந்தது. அது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்ப டையில் ஆவின் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து திரு வள்ளுவர் சிலை சந்திப்பு வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கே.கே. நகர் மேலமடையில் இருந்து ஆவின் வழியாக திருவள்ளுவர் சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குருவிக்காரன் 2-வது சாலை, காந்தி வீதி ராஜேசுவரி ஓட்டல் மற்றும் திருவள்ளுவர் சிலை சந்திப்பு வழியாக பனகல் சாலைக்கு வேண்டும்.

    குருவிக்காரன்சாலை 2-வது சாலை ஒரு வழிப்பா தையாக மாற்றப்பட்டது. காந்தி வீதியில் இருந்து குருவிக்காரன் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கே.கே. நகர் மேல மடையில் இருந்து ஆவின் சந்திப்பு வழியாக செல்லும் பஸ்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் வழியாக ராஜேசுவரி ஓட்டல் சென்று, சுப்புராமன் தெருவின் இடதுபுறம் திரும்பி அண்ணா பஸ் நிலையம் வழியாக சுப்புராமன் தெருவின் வடக்குத்தெரு வழியாக பனகல் சாலைக்கு செல்ல வேண்டும். இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

    பனகல் சாலை, சுப்புராமன் தெரு வழியாக அண்ணா சாலையில் இருந்து வடக்குத்தெரு, அண்ணா பஸ் நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர்சிலை சந்திப்பில் உள்ள கோரிப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்களின் நிறுத்தம் அகற்றப்படுகிறது.

    மதுரை பனகல் சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

    • நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினார்.

    அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பு குறையவில்லை.

    இதற்கிடையே நோயாளி பிரகாஷ்ராஜின் உறவினர்கள் கைவிட்டு சென்றனர். இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகாஷ்ராஜை ஆஸ்பத்திரி வாசலில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பிரகாஷ்ராஜ் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வார்டில் வேலை பார்த்த 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தூய்மை பணியாளர் ஆகிய 4 பேர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேரையும் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து டீன் உத்தரவிட்டார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள் உள்பட 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
    • போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவனியாபுரம்:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எம்.வையாபுரிபட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் அ.ம.மு.க. நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பஸ்சில் வெளியே வந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து அவதூறாக பேசினார்.

    இதனை கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஸ்வரன் மீது புகார் செய்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை திட்டமிட்டு அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து உள்ளார். அதன்பேரில் ராஜேஸ்வரன் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இருதரப்பு புகார் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி உற்சவம் நடந்தது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடுமாடு போட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    இந்த மாட்டு வண்டி போட்டியில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாடுகளுக்கான 8 மைல் தூரத்திற்கு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்

    பி.ராஜசேகரன் மற்றும் திருவாதவூர் கிராமத்தார்கள் மற்றும் திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடுமாட்டு போட்டியில் ரூ. 30 ஆயிரத்து 1-யை திருவாதவூர் அருகே உள்ள கழுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி வென்றது. 2-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து1-யை அ.வல்லா ளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசு ரூ.20ஆயிரத்து 1-யை கோட்ட நத்தம்பட்டி ரவி மற்றும் திருவாதவூர் எஸ்.எம். பிரதர்ஸ் ஆகியோர் வண்டியும், 4-ம் பரிசு 12 ஆயிரத்து 1-யை திருவாதவூர் தன்வந்த் பிரசாந்த் வண்டியும் வென்றன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்க ளுக்கு விழா கமிட்டியா ளர்கள் பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பெரிய மாடு, சின்ன மாடு, போட்டி நடந்தது. திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
    • பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன

    மேலூர்

    மதுரை அருகே உள்ள சக்குடியில் முப்புலி சாமி கோவில் உற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவ விழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடந்து வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட வாடிவாசலில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியவுடன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.

    சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களின் பிடியில் சிக்காமல் நழுவியது. சிறப்பாக மாடுபிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் 10 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கும் முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், பூமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    • அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.
    • வில்லாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து பெருங்குடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு வில்லாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் குழுமி இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கீழவாசல், தவிட்டுச்சந்தை, பந்தடி, விளக்குத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திரளான அ.தி.மு.க.வினர் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் பயபக்தியுடன் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கீழவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், அவுட் போஸ்ட் வழியாக அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட்யார்டு நட்சத்திர ஒட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஓட்டல் வரை அனைத்து பகுதிகளிலும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் நின்று அவரை வரவேற்றனர்.

    இன்று மதியம் 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் சென்று அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., வேலுநாச்சியார் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார்.

    பின்னர் மாலை 6 மணியளவில் சிவகங்கை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
    • கருப்பு கொடி ஏற்றியும், கருப்பி பேட்ஸ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவினுக்கு 60 சதவீத பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள வியாபாரிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தமிழக அரசு ஏற்று கொள்ளவில்லை.

    இந்த நிலையில் உசிலம்பட்டி ஆவின் பால் சேகரிப்பு மையத்தில் சமரச பேச்சுவார்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சாந்தி, துணை பதிவாளர் செல்வம், உதவி பொது மேலாளர் வேலுச்சாமி மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் பெரியகருப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமரச தீர்வு எட்டப்படவில்லை.

    எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் இன்று (11-ந் தேதி) முதல் ஆவினுக்கு பால் விநியோகத்தை நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று காலை முதல் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    சங்க நிர்வாகிகள் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பி பேட்ஸ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவினுக்கு 60 சதவீத பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாவட்டம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பால் விநியோக நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே ஆவின் பால் மேலாளர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
    • இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அலங்காநல்லூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

    தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

    இதன் காரணமாக ராம்பாலாஜி, வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்துள்ளார்.

    பின்னர் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ராம் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ.50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×