என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது.
    • மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.

    மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

    மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என தவெக தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். அண்மையில் தவெக கட்சியையும் தொண்டர்களையும் சீமான் கடுமையாக தாக்கி விமர்சித்த நிலையில் அவருக்கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

    • மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
    • மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.


    • மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
    • தொண்டர்கள் வருகையால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகையால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
    • சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி.

    மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

    கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கொடிக்கம்பம் விபத்தை தொடர்ந்து, புதிய கொடிக்கம்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநாட்டு மேடை அருகே சிறிய கொடிக் கம்பம் நடப்பட்டு, விஜய் கொடியேற்ற உள்ளார்.

    இதற்கிடையே, மதுரை தவெக 2வது மாநில மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.

    • கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.

    மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சேதமைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும்.
    • ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொடிக்கம்பம் குறித்து மதுரையில் நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார், ஒத்துழைப்பு தருவதற்கு அரசு தரப்பு தயாரா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    • மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் மாநாடு திடலில் குவிய தொடங்கி உள்ளனர். பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாநாட்டு நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பாரப்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை (21-ந் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

    அதன்படி மாநாட்டு நடைபெறும் திடலை ஒட்டியுள்ள கூடக் கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பைக்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வலையங்கு ளம் டோல்கேட், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு, சிவரக்கோட்டை, திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, கூத்தியார்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் அடைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பாரபத்தியில் திடீர் கடைகள் முளைத்துள்ளன. மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கடை அமைப்பவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமித்து அமைக்கக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறாக அமைக்கப்பட்டால் கடைகள் அகற்றப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கடந்த முறை விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போது கடைகள் எதுவும் இல்லாததால் மாநாட்டிற்கு வந்த ஏராளமானோர் தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவர்களை வாங்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.

    மதுரை:

    த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    தொண்டர்கள் சந்திப்பு முடிந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்குகிறது. நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றுகிறார். அடுத்ததாக மேடையில் நின்றபடி கட்சி கொடியை 'ரிமோட்' மூலம் விஜய் ஏற்றுகிறார். தொடர்ந்து கொள்கை தலைவர்கள் படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அடுத்ததாக உறுதிமொழி எடுக்கப்பட்டு கட்சி கொள்கை பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது.

    இதை தொடர்ந்து மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார். விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது.

    மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலையில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர். மாநாடு பந்தலில் அதிகாலை நடந்த சிறப்பு யாகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டார்.

    மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக த.வெ.க. மாநாடு அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றத்தில் அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் 'வரலாறு திரும்புகிறது' என்ற வாசகத்துடன் கட்அவுட் வைக்கப்பட்டு உள்ளது. மேடையின் அருகே கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

    குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொண்டர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு லிட்டர் காலி பாட்டில் வழங்கப்பட்டு குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடித்துக் கொள்ளும் வகையில் 10 லட்சம் பாட்டில்கள் கொடுக்கப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மீறி வரும் பெண்களுக்கு முன்னேற்பாடாக பிங்க் அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டு திடலில் 400 மருத்துவ குழுக்கள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக தயார் நிலையில் மாநாட்டு பந்தலை சுற்றி இருப்பார்கள். கூட்டத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் டிரோன் மூலம் அவசர மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இது மட்டுமின்றி தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் 50 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது.

    கூட்டத்தில் நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புக்கு கட்சி சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய சீருடையணிந்த தன்னார்வலர்கள் ஈடுபட இருக்கின்றனர்.

    மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டுக்கு 3 மடங்கு கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரை த.வெ.க. மாநில மாநாடு தமிழக அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
    • மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.

    இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது.
    • மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணாவும், எம்ஜிஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். அப்போது விஜயகாந்த் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது பிரேமலதா தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "விஜயகாந்த் புகைப்படங்களை நாங்கள் எங்கும் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

    • கோவில் நிதியில் திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு.
    • கோவில் நிதியை கோவில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    கோவில் நிதியில் திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கோவில் நிதியை கோவில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என விதிகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
    • பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.

    பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

    மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்துசென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.

    தூய்மை பணி, மகளிர் பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமனம்.

    ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனி பாதைகள்.

    பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அவசர தேவைக்காக டிரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கவும் திட்டம்.

    மாநாட்டு திடலைச் சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

    50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.

    100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது.

    ×