என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு டாஸ்மாக் மூடல் - சாலையோர வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு
    X

    த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு டாஸ்மாக் மூடல் - சாலையோர வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    • மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் மாநாடு திடலில் குவிய தொடங்கி உள்ளனர். பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாநாட்டு நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பாரப்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை (21-ந் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

    அதன்படி மாநாட்டு நடைபெறும் திடலை ஒட்டியுள்ள கூடக் கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பைக்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வலையங்கு ளம் டோல்கேட், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு, சிவரக்கோட்டை, திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, கூத்தியார்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் அடைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பாரபத்தியில் திடீர் கடைகள் முளைத்துள்ளன. மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கடை அமைப்பவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமித்து அமைக்கக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறாக அமைக்கப்பட்டால் கடைகள் அகற்றப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கடந்த முறை விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போது கடைகள் எதுவும் இல்லாததால் மாநாட்டிற்கு வந்த ஏராளமானோர் தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவர்களை வாங்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×