என் மலர்tooltip icon

    மதுரை

    • மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.

    தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு இசை நிகழ்ச்சியுடன் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.

    அப்போது, தொண்டர்கள் தூக்கி வீசிய கட்சி துண்டுகளை அணிந்தவாறும், தலையில் கட்டியபடியும் விஜய் சென்றார். அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

    • மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.

    தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது.
    • த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

    அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    மதுரை மாநாட்டில் விஜயும் அஜித்தும் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் பிடித்திருந்த கட்-அவுட் புகைப்படம் இணையத்தில் வைரலானாது.

    • தவெக மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்யவுள்ளார்.

    இந்த நிலையில், த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியுள்ளது.

    • த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    மதுரையில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், த.வெ.க.வின் தொண்டர்கள் வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே, தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியை அடுத்த ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

    இதேபோல், மாநாடு திடலுக்கு அருகில் தவெக தொண்டர்கள் சிலர் கையில் மது பாட்டிலுடன் குடித்துக் கொண்டிருந்தனர். இது, டிரோன் கேமராவில் பதிவாவதை கண்ட தொண்டர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

    • மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
    • சற்று நேரத்தில் விஜய் மேடைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாநாட்டு முகப்பில் உள்ள உள்ள 5 நுழைவு வாயில்கள் வழியாக சாரை சாரையாக தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதுபோன்ற எந்த ஒரு மாநாட்டிற்கும் எழுச்சியோ, தொண்டர்கள் வருகையோ இருந்ததில்லை என்று கூறுமளவிற்கு த.வெ.க. 2-வது மாநில மாநாடு அனைத்து தரப்பினரையும் பேச வைத்துள்ளது.

    மாநாடு நடைபெறும் பாரப்பத்தி பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தொண்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் அவதியுறும் நிலையில், தற்போதே நிர்வாகிகள் மாநாட்டு மேடையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் விஜய் மாநாட்டு மேடைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 300 மீட்டர் நீளத்திலான ரேம்ப் வாக் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார்.

    அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிக இடங்களை பிடிக்கும் அணிகளே ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் அதிகமாகியிருக்கிறது. எனவே தி.மு.க., பா.ஜ.க.வை தொடர்ந்து தற்போது த.வெ.க.வும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை குறி வைத்திருக்கிறது. அதன்படி விஜய், த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டார்.

    அதன்படி த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.

    அதேபோன்று வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் வாகனங்களை வெளியே அனுப்பாமல் நெறிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறைக்கு உதவியாக இருக்கவும் த.வெ.க. நிர்வாகிகளே பல்வேறு குழுக்கள் அமைத்துள்ளனர்.

    மாநாட்டின் மேடைகளில் த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் அமரும் வகையில் சுமார் 216 மீட்டர் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில நிர்வாகிகள் மற்றும் முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் அமருவதற்காக 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. விஜய் 300 மீட்டர் வரை நடந்து சென்று தொண்டர்களை அருகில் சந்திக்க ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இவை தவிர, 600 பேர் கொண்ட மருத்துவக்குழுவில் 250 டாக்டர்கள், 250 செவலியர்கள் பணியில் உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து மாநாடு நிகழ்வுகளை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை தவிர குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட் டவை சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளன.

    இதுஒருபுறம் இருக்க மாநாட்டிற்கு வரும் தொண்டர்களையும், பொது மக்களையும் வரவேற்கும் விதமாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் இரவு பகல் பார்க்காமல் மாநாட்டு வேலைகளை நிறைவு செய்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினார். அதன் பலனாக இன்று மாநாடுகளை கட்டத்தொ டங்கியுள்ளது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் மதுரை வந்தடைந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அனைத்து ஏற்பாடுகளை பார்த்து வியந்த அவர் நிர்வாகிகளை பாராட்டினார். இன்று பிற்பகல் மாநாடு 3.15 மணிக்கு தொடங்குகிறது.

    பிற்பகலில் த.வெ.க. கொடியை தலைவர் விஜய் ஏற்றி வைக்கிறார். பின்னர் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 300 மீட்டர் நீளத்திலான ரேம்ப் வாக் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் மாநாட்டு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், காமராஜர், பெரியார், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் உள்ளிட்டவை நடக்கிறது. நிறைவாக த.வெ.க. தலைவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு எழுச்சி உரையாற்ற உள்ளார். சுமார் 45 நிமிடங்களுக்கு விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது யதார்த்தமான, புதிய உத்வேகம் கொடுக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது.
    • கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.

    புதுக்கோட்டை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப் பத்தி பகுதியில் இன்று நடை பெறுகிறது.

    பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து கர்ப்பிணி பெண் தனது மகனுடன் மாநாட்டுக்கு புறப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.

    • மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது.
    • மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    மாநாட்டுப் பணிகள் நேற்று மாலையுடன் 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதலே மாநாட்டு திடல் களை கட்டியது.

    சட்டமன்ற தேர்தலுக்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டிற்கு பல லட்சம் தொண்டர்கள் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கேற்ப பல்வேறு முன்னேற்பாடுகள் முன்னதாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

    பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு தொண்டர்கள் வரவேண்டாம் என்றும், அதேபோல் கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் மாநாட்டின் மூலம் விஜய்யை சந்திக்கும் ஆர்வத்தில் வரும் பெண்களுக்கு போதிய வசதிகளை செய்துதர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்பேரில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு குளிர்சாதன வசதியுடன் பிங்க் அறை தயார் செய்யப்பட்டுள்ளது.

    அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினார். இதனால் வழியில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் பல மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பஸ், வேன், கார் என தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. முன்னதாக மாநாடு வரவேற்பு குழு, மருத்துவக்குழு, மகளிர் பாதுகாப்புக்குழு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழு, தீர்மானக்குழு, குடிநீர் மேலாண்மைக்குழு உள்ளிட்ட 13 குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதலே மதுரை மாவட்ட எல்லையில் இருந்து மாநாட்டு திடல் வரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழுவினர் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர். மேலும் பார்க்கிங் இடத்தில் எவ்வாறு நிறுத்த வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.

    மேலும் மாநாட்டு திடல் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நேற்று இரவு முதலே தங்களுக்கான பணிகளை தொடங்கினர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட னர். அதேபோல் இன்று காலை மாநாட்டுக்கு வந்த பெண்களை வரவேற்ற மகளிர் தன்னார்வலர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த த.வெ.க. மாநில மாநாட்டையொட்டி, தென் மண்டலம், மேற்கு மண்ட லம், மத்திய மண்டலம் என 3 மண்டலத்தை சேர்ந்த சுமார் 3,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மூன்று மண்டலத்திற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு இருந்தனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் 10 துணை போலீஸ் கமிஷனர்கள், 10 சூப்பிரண்டுகள், 35 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து 50 பெண்கள், 500 ஆண் பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர்.

    மேலும், மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தவாறு மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் டிரோன் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனங்களும் மாநாட்டு திடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    • பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர்.
    • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ் மூலம் தொண்டர்கள் வருகை தர தொடங்கினர். இன்று மாலை மாநாடு தொடங்குகிறது.

    இதன் காரணமாக மதுரைக்கு வந்திருந்த த.வெ.க.வினர் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு படையெடுத்தனர். அதன்படி முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான த.வெ.க.வினர் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் கோவிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வேன், கார்களில் வந்தவர்கள் மாநாட்டு திடலுக்கு செல்லாமல் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் உள்ளூர் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று த.வெ.க.வினரும் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஏராளமான த.வெ.க. வினர் இன்று அதிகாலை முதல் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர். அங்கு மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோவில், கள்ளழகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாநாட்டு திட லுக்கு சென்றனர்.

    இதே போல் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாண்டி கோவிலில் த.வெ.க.வினர் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் த.வெ.க. வினர் அதிகளவில் வருகை தந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.

    • மாலை 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையை அடுத்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது.  மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.

    இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் த.வெ.க. மாநாட்டில் புதிய பாடல் வெளியாக உள்ளது. 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தீமில் த.வெ.க.வின் புதிய பாடல் இன்று வெளியிடப்படுகிறது.

    த.வெ.க. கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் தி.மு.க., அதி.மு.க, ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    • மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது.
    • மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.

    மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

    மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என தவெக தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். அண்மையில் தவெக கட்சியையும் தொண்டர்களையும் சீமான் கடுமையாக தாக்கி விமர்சித்த நிலையில் அவருக்கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

    ×