என் மலர்
மதுரை
- மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது.
- மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கனும் பிரைம் மினிஸ்டர் அவர்களே..!
மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா?. யாருக்கு எதிராக என்றுதானே கேட்கிறீர்கள்?. வேறுயாரு.., திரைமறை உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்சன் திமகவும்தான்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, 3ஆவது முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்கள். ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?. இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் சதி செய்யவா?
மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கனும் பிரைம் மினிஸ்டர் அவர்களே..!
மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?
எங்களுக்கு என்னென்ன தேவையோ, நல்லதோ அதை செய்யமாட்டேன் என்கிறீர்கள். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து மக்களை ஏமாற்ற நேரடியான பாசிச பாஜக கூட்டணி ஒன்று, மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக மறைமுக ஆர்எஸ்எஸ் அடிமை குடும்பம் என்ற இன்னொரு கூட்டணி. மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜி?. அப்படிதானே ஜி, என்ன ஜி.
என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?
ஒரு எம்.பி. கூட வழங்காததால் தமிழகத்திற்கு ஓர வஞ்சணை செய்கிறது. சங்கம் வைத்து தமிழை வளர்த்த மண் இந்த மதுரை மண். கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்துவிட்டு நாகரீகம், அடையாளங்களையும் அழிக்க உள்ளட வேலை செய்ய நினைக்கிறீங்க. தமிழ்நாட்டை தொட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஏராளமான உதாரணம் இருக்கிறது.
இதெல்லாத்தையும் மறைத்துவிட்டு எங்கள் மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீங்க. உங்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
இவ்வாறு விஜய் பேசினார்.
- ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.
- விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சிப் பெயர் அறிவித்தபோது, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்றனர்.
மாநாடு நடத்த முடியாது என்றார்கள். தற்போது, ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.
கூட்டம் எப்படி ஓட்டாக மாறும் என்கிறார்கள். ஆனால், நம் தொடர்பு எல்லாம் மக்களுடன் தான். அது எதிரிக்கு நல்லாவே தெரியும்.
விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.
பெண் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தான் நமது முதன்மை அக்கறை. இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக அரசு அமைப்பதே நமது நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர்.
- விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
இதனையடுத்து மக்களிடம் உரையாற்றிய விஜய், "ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர். அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். அந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.
எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்" தெரிவித்தார்
- மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா?
- தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் பாஜக ஒன்றிய அரசு.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள் பாஜகவின் மோடி அவர்களே.
மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா?
நேரடி, மறைமுகம் என கூட்டணி போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?
தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் பாஜக ஒன்றிய அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- இப்போ எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அந்த கட்சியை கட்டிக்காக்கிறது யார்?.
- அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?.
மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை மீண்டும் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். தவெக-வுக்கும் திமுக-வுக்கும் எதிராகத்தான் போட்டி. 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர் எனத் தெரிவித்தார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதிமுக-வை விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதிமுக குறித்து விஜய் பேசியதாவது:-
மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம் உலக மகா ஊழ்ல் கட்சியா என்ன?.., மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்குங்க.
நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து கொண்டு, மறுபக்கம் மதசார்பற்ற கூட்டணி என ஏமாற்றிக் கொண்டு இருப்பதுபோல் நம்ம கூட்டணி இருக்காது.
நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும். அப்படி என்றால் யார் கூட்டணிக்கு வருகிறார்கள் என்ற கேள்வி வரும். அதற்கெல்லாம் சஸ்பென்ஸ் உடன் சஞ்சாரம் செய்யுங்கள்.
எதிர்காலம் வரும். என் கடமை வரும். இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை படித்தார்.
எம்ஜிஆர் யார் தெரியும்ல.., அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல.., அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல.., கனவு கூட காண முடியல..,
எப்படியாவது முதலமைச்சர் பதவியை தன்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர். கெஞ்ச வைத்தவர். அதனால..,
சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, ஆனா இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்?. அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடனும், எப்படி பட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேசம் போட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்கு ஆகாது.
இவ்வாறு விஜய் பேசினார்.
- பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பெண்கள் தன்னை அப்பா என்று அழைத்துக் கொள்கிறோர்.
- ஸ்டாலின் அங்கிள்.. what uncle its very wrong uncle.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடமாட்டோம்.
உங்கள் ஆட்சி ஊழல் இல்லாமல் நேர்மையாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பதில் சொல்லுங்கள் அங்கிள்.
பாதுகாப்பில்லை என்று பெண்கள் கதறும் குரல் ஸ்டாலின் அங்கிளுக்கு கேட்கவில்லையா?
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பெண்கள் தன்னை அப்பா என்று அழைக்கிறார். ஸ்டாலின் அங்கிள்.. what uncle its very wrong uncle.
ஸ்டாலின் Uncle, What Uncle, It's Very Wrong Uncle. தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், மு.க.ஸ்டாலின் Uncle-ஆக இருந்தாலும் விடமாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார்.
- என்னுடைய அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
இதனையடுத்து மக்களிடம் உரையாற்றிய விஜய், "சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிமீ தூரம் சத்தம் கேட்கும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். இறந்து போன மிருகங்களை சிங்கம் தொட்டு கூட பார்க்காது. காட்டில் எல்லை வகுத்து காட்டையே தனது கட்டுப்பாட்டில் சிங்கம் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் தனியே வரவேண்டும் என்று நினைத்தால் தனியே வந்து அத்தனைக்கும் தண்ணீ காட்டும். சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்.
மதுரை என்றால் வீரம் தான். மதுரை என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் நினைவுக்கு வரும். மதுரை உணர்வு பூர்வமான மண். இந்த மண்ணில் வாழ்பவர்களும் உணர்வுபூர்வமானவர்தான்.
மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் மதுரை மண்ணை சேர்ந்தவர் தானே" என்று தெரிவித்தார்.
- சமூகநீதி கொள்கைகளிலிருந்து விலகியதால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார்.
- அண்ணா, எம்ஜிஆரின் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜயால் மட்டுமே முடியும்.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது த.வெ.க. மாநாட்டு முகப்பு வரவேற்பு பேனர்களில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றது ஏன் என ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அண்ணாவுக்கு அடுத்து வந்தவர்கள் சமூகநீதி கொள்கைகளிலிருந்து விலகியதால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார்.
அண்ணாவின் கொள்கை, அதை பின்பற்றிய எம்ஜிஆர்-ஐ வணங்கும் வகையில் மாநாட்டில் பேனர் வைக்கப்பட்டது.
தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தடைகளை ஏற்படுத்தினார்.
அண்ணாவின் கொள்கைகளை அடுத்து ஒருவர் கடைபிடித்து கொண்டு வர முடியும் என்றால் அது தலைவர் விஜயால் மட்டுமே முடியும்.
அண்ணா, எம்ஜிஆரின் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜயால் மட்டுமே முடியும்.
அண்ணா கூறியதைப்போல் தம்பியே வா தலைமை ஏற்க வா என தலைவர் விஜயை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வார் கூறினார்.
- மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது.
- தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டு மேடைக்கு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
இதனிடையே, மதுரை மாநாட்டில், த.வெ.க. கொடியுடன் பனை மரத்தில் ஏறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
- விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.
- நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.
மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.
அப்போது அவர் விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.
மேலும் அவர்," சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தினோம். அப்போது நம் எண்ணங்களை, ஆசைகளை தலைவருடன் பகிர்ந்துக் கொண்டோம்.
நம் தலைவர் ஒரு கட்சியை அல்ல. புரட்சியை தொடங்கினார் என்று கோடிக்கணக்கான மக்கள் படை இவருடன் நிற்கிறது. இதற்கு பேர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது.
அதேபோல், இன்று நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.
இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.
எந்தவொரு தலைவருக்கும் வராத அளவில் தலைவர் விஜய்க்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் வரத் தொடங்கியது" என்றார்.
- புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
- கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
- தவெக தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.
- த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், த.வெ.க. மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சென்ற பிரபாகரன் என்பவருக்கு, சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த பிரபாகரன் மேல் சிகிச்சைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்






