என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரதட்சணை கொடுமை: ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் ஜாமின்
- புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
- கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
Next Story






