என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களே.., பிரதமரை நோக்கி கேள்விகளை அடுக்கிய விஜய்..!
- மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது.
- மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கனும் பிரைம் மினிஸ்டர் அவர்களே..!
மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா?. யாருக்கு எதிராக என்றுதானே கேட்கிறீர்கள்?. வேறுயாரு.., திரைமறை உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்சன் திமகவும்தான்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, 3ஆவது முறையாக மத்திய அரசின் அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்கள். ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?. இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் சதி செய்யவா?
மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மக்கள் சார்பாக உள்ளிடம் சில கேள்விகள் கேட்கனும் பிரைம் மினிஸ்டர் அவர்களே..!
மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?
எங்களுக்கு என்னென்ன தேவையோ, நல்லதோ அதை செய்யமாட்டேன் என்கிறீர்கள். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து மக்களை ஏமாற்ற நேரடியான பாசிச பாஜக கூட்டணி ஒன்று, மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக மறைமுக ஆர்எஸ்எஸ் அடிமை குடும்பம் என்ற இன்னொரு கூட்டணி. மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜி?. அப்படிதானே ஜி, என்ன ஜி.
என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?
ஒரு எம்.பி. கூட வழங்காததால் தமிழகத்திற்கு ஓர வஞ்சணை செய்கிறது. சங்கம் வைத்து தமிழை வளர்த்த மண் இந்த மதுரை மண். கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்துவிட்டு நாகரீகம், அடையாளங்களையும் அழிக்க உள்ளட வேலை செய்ய நினைக்கிறீங்க. தமிழ்நாட்டை தொட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஏராளமான உதாரணம் இருக்கிறது.
இதெல்லாத்தையும் மறைத்துவிட்டு எங்கள் மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீங்க. உங்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
இவ்வாறு விஜய் பேசினார்.






