என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் இன்று த.வெ.க. 2-வது மாநில மாநாடு: முன்கூட்டியே தொடங்க திட்டம்?
- மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
- தொண்டர்கள் வருகையால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.
இந்நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகையால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






