என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடிக்கம்பம் விழுந்து சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்- த.வெ.க.
- கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
- கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.
மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






