என் மலர்
மதுரை
- திருமங்கலத்தில் 30 நிமிடங்களில் 15 யோகாசனம் இடைவிடாதுசெய்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
- உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் சோழன் உலக சாதனை பத்தகம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான யோகா உலகசாதனை நிகழ்ச்சி திருமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
உடல்நலத்தை பேணிக் காக்கும் வகையில் நடை பெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 5 வயது முதல் 17 வயதுவரையிலான 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு ஆசனத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன நிலைகளில் 30 நிமிடங்கள் இடைவிடாத செய்து நமது உடலை சமநிலையில் வைத்திருக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்வு நடை பெற்றது.
உலக சோடாகான் கராத்தே அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சோழன் உலக புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் மாஸ்டர் பால் பாண்டி வரவேற்றார்.
இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாத ஹஸ்தா சனம், உட்கட்டா சனம், திருகோண ஆசனம், பச்சிமோதாசனம், மச்சா சனம், பாலாசனம், புஜங்கா சனம் உள்ளிட்ட 15 யோகா ஆசனங்களில் ஒரு ஆச னத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 30 நிமி டங்கள் அனைத்து ஆசன நிலை களிலும் உடலை சமநிலை யில் வைத்திருந்தனர். மாணவ, மாணவியர்களின் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன உலக சாதனை முயற்சி வெற்றி பெற்றதாக சோழன் புத்தகம் அறி வித்தது. இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவி யர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
- அழகர்கோவிலில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர்
அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொய் கை கரைப்பட்டி, நாயக்கன் பட்டி. அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி தொப் பலாம் பட்டி, கொடிமங்க லம், கருவனூர், தேத்தாம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு மணிமாறன் பரிசு வழங்கினார்.
- கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.
தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.1000 மணிமாறன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் பாண்டி முருகன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன்.ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், மதன் குமார், ராமமூர்த்தி, நாக ராஜன், பாண்டியன், ஆலம் பட்டி சண்முகம், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறு்ப பாளர் பாசபிரபு, திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், மாவட்ட அணி அமைப்பாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற பாராளுமன்றத்தேர்தலில் கிங் மேக்கராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
மதுரை
தேவர் குருபூஜை விழா வில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காலை மதுரை வருகிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பாக வலையங்குளம் டோல்கேட் அருகே சீருடை அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன் னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தேசியமும், தெய்வகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, வீர அஞ்சலி செலுத்த எடப்பாடி யார் வருகிறார். எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது தேவர் குரு பூஜை விழாவின் போது எதிர்க்கட்சிகள், சமய தலை வர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுக ளையும் செய்து கொடுத்தார். அதேபோல் தற்போதும் பாதுகாப்பான ஏற்பாடு களை முதலமைச்சர் செய் வார் என்று மக்கள் நம்புகி றார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என எடப்பாடியார் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் மாளிகை யில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியில் அந்த நபர் பெட்ரோல் குண்டை பொருத்தி அதை வீசும் காட்சி வெளியிடப்பட்டது.
இப்படி சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் பெட் ரோல் குண்டு வீசி உள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை எடப்பாடியாருக்கு மக்கள் வழங்குவார்கள். அரசியல் கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்கு வார். கால சக்கரம் சூழல்கி றது, அதற்கு ஏற்றாற்போல் எடப்பாடியாருக்கு என்ன பதவி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வரு கின்ற நாடாளுமன்ற தேர்த லின் மூலம் இந்திய ஆளுமை களின் கிங் மேக்கராக எடப் பாடியார் திகழ்வார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
- மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நரிமேடு பகுதியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை யில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற் றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித் தார். எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு புது கட்சியை தொடங்கினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டினார் இரட்டை இலையை சின்னமாக அறி வித்தார். தற்போது இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.
எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் உழ வர் மகனாக பிறந்தவர் அரசு பள்ளியில் படித்த வர். அ.தி.மு.க. ஆட்சியில் 100 நாட்கள் தாண்டாது என பேசினார். மு க ஸ்டாலின். அந்தப் பேச்சுக்களை தவிர்ப்படியாக்கிவிட்டு 4 1/2 வருஷம் சிறப்பாக ஆட்சி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது இரண்டரை கோடி தொண் டர் களை அ.தி.மு.க.வில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.
மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்வேன், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என கூறினார்கள். அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் எனது தந்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி னார். ஆனால் எதையும் செய்யவில்லை.
மாணவி அனிதா மரணத்தை வைத்து தி.மு.க. நாடகம் ஆடினார்கள்.
தி.மு.க. இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை, மக்கள் வரிப்பணத்தில் திமுக தலைவர் கலைஞர் இலவச டி.வி. கொடுத்தார். கேபிள் கனெக்சனை கொண்டு வந்து ஐந்து வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.
மதுக்கடைகளில் குவாட் டருக்கு ரூ. 10 அதிகமாக கொடுத்தால் தான் கிடைக் கும். இந்த பத்து ரூபாய் கரூர் கம்பெனிக்கு போனது தற் போது முதல்வருக்கு அந்த பத்து ரூபாய் செல்கிறது.
ஊழல் செய்வதில் சிறந்த கட்சி தி.மு.க., தற்போது விலைவாசியை கட்டுப் படுத்தவில்லை.விலைவாசி உயர்வு அதிகரித்து மக்கள் திண்டாட்டத்தில் இருக்கி றார்கள்.
தற்போது எங்கு பார்த் தாலும் போதை கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்கி றோம் என காவல்துறை சொல்கிறது ஆனால் தடுக்க முடியவில்லை. தி.மு.க. கட்சிக்காரர்களே கஞ்சா விற்கிறார்கள். மதுரைக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் தி.மு.க. செயல் படுத்த வில்லை.
1,296 கோடி மதிப்பில் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு சிறப்பு திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதை 2023 நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். என்னை தெர்மாகோல் என நக்கல் செய்தார்கள். அமைச்சர் துரைமுருகன் என்னை கிண்டல் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர் களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் ஜெயலலிதா.பெண்களுக்கு மாணவி களுக்கு மாதவிடாய் காலங் களில் துணியை வைக்கிறார் கள் அதனால் இலவசமாக நாப்கின் வழங்கினார்.பெண் குழந்தைகள் 12-வது படிக்கும் போது இலவசமாக லேப்டாப் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பெண் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுத்தார். பெண்கள் 10-ம் வகுப்பு படித்தால் 25 ஆயிரம் ரூபாய் பட்டப் படிப்பு படித்தால் 50 ஆயி ரம் ரூபாய் திருமண உதவித் தொகை கொடுத்தது ஜெயல லிதா. அதன் பின்பு பெண் களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தி சீர்வரிசை கொடுத்தவர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும்போது சத்தான புராத பவுடர்கள் கொடுத்து 18,000 பணம் கொடுத்தார்.குழந்தை பிறந்த பின்பு 16 வகையான பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல பெட்டியை கொடுத்தவர் ஜெயலலிதா.
பெண்களுக்கு இலவச மாக மிக்ஸி கிரைண்டர் மின்விரிசி கொடுத்தவர் ஜெயலலிதா.
வேலைக்கு பணி புரியும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்தார்.மகளிர் பிரச்சினையை தீர்ப் பதற்கு மகளிர் காவல் நிலை யங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.பெண்கள் கமெண்ட்டோ படை கொண்டு வந்தார்.உள் ளாட்சித் தேர்தலில் பெண் கள் 50 சதவீதம் போட்டியிட வேண்டும் என சட்டம் நிறைவேற்றியவர் ஜெயலலி தா.
நாட்டில் பசி இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் விலை யில்லா அரிசி கொடுத்தார்.இது போன்ற ஏதாவது ஒரு திட்டத்தை திமுக கொண்டு வந்ததா?
எனவே மீண்டும் எடப் பாடியார் தலைமையில் நல்லாட்சி விரைவில் அமை யும். அப்போது இந்த திட்டங் கள் எல்லாம் மக்களுக்கு மீண்டும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- வருகிற 1-ந்தேதி முதல் செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
- மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.
மதுரை
தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விருதுநகர்- செங்கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து வருகிற நவ.1 முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது.
இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமர்ந்து பய ணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.
நாளை மறுநாள் 31-ந் தேதி சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 1-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட உள்ளன.
அதேபோல் வருகிற 1-ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 2 -ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பத்ரகாளியம்மன் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
- மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பு நடந்தது. உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவாஜி, சங்க பிரதிநிதி வைரமணி, பள்ளி முதல்வர் ரதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் கரிகாலன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட சிலம்ப கழக செயலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மெட்ரிக் பள்ளி உறுப்பினர் மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.
- அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.
மேலூர்
மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் சார்பாக மேலூர் தாலுகா அரசு பள்ளியில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதி மேலூர் தாலுகா அளவில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் நிரஞ்சனா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 487 மதிப்பெண் பெற்று முதலி டம் பெற்றார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் சாருமதி மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று 478 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் பிரிய தர்ஷினி தனியாமங் கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயின்று 473 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கினர். 12-ம் வகுப்பு பொதுத் தேர் வில் வெள்ளலூர் கிராமத் தை சேர்ந்த சேதுராஜன் மகள் முத்து மீனாட்சி மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 558 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 25,000 பரிசு தொகையை வழங்கி னர்.
கருங்காலக்குடியை சேர்ந்த காதர் பாட்சா மகன் முகமது பாரூக் கருங்காலக் குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று 557 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த திருப் பதி மகள் மகாலட்சுமி உறங் கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று 556 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டி னர்.
இந்த நிகழ்ச்சியில் டை மண்ட் ஜூப்லி கிளப் தலை வர் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, சேது பாண்டி, மகாராஜன், இப்ரா ஹிம் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.
- சோழவந்தானில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
- நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
சோழவந்தான்
சோழவந்தானில் மருதுபாண்டியர் 222-வது குருபூஜை விழா நடந்தது. சோழ வந்தான் பஸ் நிலையம் முன்பு மருது பாண்டியர் படம் வைக்கப் பட்டு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.தி.மு.க. சார்பில் வெங்க டேசன் எம்.எல்.ஏ. தலைமை யில் மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.
நகர செயலாளர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன், ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெய குமார், இளைஞரணி கேபிள் மணி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர்கள் கதிர்வேல், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது.
காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டார தலைவர் ராமன், மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில்பேரூர் செயலாளர் கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, குருநாதன் தேவேந்திரன், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
சங்கங்கோட்டை கிராம கமிட்டி தலைவர் வக்கீல் சிவகுமார் மரியாதை செலுத்தினார்.
சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
- மதுரையில் மருது பாண்டியர்கள் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
- இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவர்களது சிலைகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட செயலாளருமான அன்னை இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஞானசேகரன் (வடக்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நெல்லை ஜீவா மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம்,வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன்,
மாநில மகளிரணி அணி துணை செயலாளர் சகிலாபோஸ்,
மாவட்ட பொருளாளர் முத்துராஜா,அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன்,வேந்தர் பேரவை செயலாளர் கதிரவன், மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அன்னபூரணி, மாவட்ட துணை செயலாளர் ஞானசுந்தர், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரஞ்சித், வர்த்தக அணி செயலாளர் செந்தில்குமார், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்த மாதம் 2 திருவிழாக்கள் தொங்குகிறது.
- ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெரு மானின் அறுபடை வீடு களில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கந்த சஷ்டி விழாவும், கார்த்திகை தீபத் திருவிழா வும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு 2 திருவிழாக்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன.
கந்தசஷ்டி விழா வருகிற 13-ந் தேதி காப்புகட்டு தலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு மதுரை, மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்க ளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திருப்ப ரங்குன்றம் கோவிலில் தங்கி இருந்து கந்த சஷ்டி விரதம் அனுசரிப்பார்கள்.
விழா நாளன்று சண்முகர் சன்னதியில் சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு காலை யிலும், மாலையிலும் சண்முக அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து சண்முகர் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். 19-ந் தேதி காலையில் கந்த சஷ்டி தேரோட்டம் நடைபெறும். மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்ரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடை பெறும். இதில் சுப்ரமணிய சுவாமிக்கு கிரீடம் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.
இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 27-ந் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா 13-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ந் தேதி கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது. அன்றைய தினம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடைதிறப்பு நேரம் மாற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு நடை சாத்தப்படு கிறது.
இதுகுறித்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இன்றைய தினம் நள்ளிரவு 1.05 முதல் 2.23 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பரங்குன்றம் கோவில் நடையானது இரவு 7 மணிக்கே சாத்தப்படுகிறது. மீண்டும் வழக்கம்போல் நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளி-வியாபாரி உள்பட3 பேர் தற்கொலை
- அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
சிலைமான் அருகே எஸ்.புளியங்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ராஜன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகததால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் மோகன் ராஜ் (26). பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கடை வைக்க விரும்பிய மோகன் ராஜ் தாயிடம் பணம் கேட்டார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த மோகன் ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவனியாபுரம் வெள்ளக்கல் மேல தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (47). இளநீர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயபால் சென்று பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மனைவி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர் கணவர், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனவிரக்தியடைந்த ஜெயபால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






