என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பாரூர் அருகே மாமியாரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த தாமோதரஅள்ளி அருகே உள்ள குண்ணிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள்(23). இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதும், இதனால் முருகம்மாள் கோபித்து கொண்டு, வடமலைபட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் எல்லம்மாள் வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகம்மாள் கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி, வடமலைப்பட்டிக்கு சென்ற சிவபிரகாசம், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த எல்லம்மாள், அவர்களை தடுத்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சிவபிரகாசம், அருகில் இருந்த கொடுவாளால், எல்லம்மாளின் தலையில் வெட்டி உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, போச்சம்பள்ளி மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி எல்லம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிவபிரகாசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக, சிவபிரகாசத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.
    கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் மெஜஸ்டிக் லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (வயது22). இவரது நண்பர்கள் பெங்களூர் கத்ரகுப்பே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் பாபு (20), சந்திரசேகர் மகன் புனித்பாபு (18) இவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.
    மற்றொரு நண்பரான காட்டன்பேட் பகுதியில் பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் லட்சுமணபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த கமலேசன் (19).

    இவர்கள் 4 பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையில் உள்ள பால்எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பெங்களூரில் இருந்து நேற்று இரவில் புறப்பட்டுள்ளனர்.

    இதில் பால்எபினேசர், பாபு ஆகியோர் ஒரு வாகனத்திலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் ஒரு வாகனத்திலும் வந்துள்ளார்கள்.

    கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்ற இடத்தில் நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர்.

    அப்போது பால்எபினேசர், பாபு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்ப டுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே ராஜேஸ்வரி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அதற்காக அவர் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை என தெரிகிறது. கடந்த 8-ந் தேதி இரவு அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று ராஜேஸ்வரியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேப்பனப்பள்ளி அருகே பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி அருகே பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி அருகே பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளியில் பொதுமக்கள் முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு வருகிறார்களா? என அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. 

    இதில் சிலர் அபராதம் செலுத்த மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.





    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மோனிஷன்(வயது 4). இவன், தனது தாயார் தாமரையுடன், நேற்று செட்டிகாரன்கொட்டாய் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றான். அப்போது அந்த வழியே வந்தமோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாமரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே சிறுவன் பலியானான். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மோனிஷன்(வயது 4). இவன், தனது தாயார் தாமரையுடன், நேற்று செட்டிகாரன்கொட்டாய் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றான். அப்போது அந்த வழியே வந்தமோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாமரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே சிறுவன் பலியானான். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி அருகே நேபாள தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    நேபாளத்தை சேர்ந்தவர் சஞ்சய்ராம் (வயது 34). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சஞ்சய்ராம், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அஞ்செட்டி அருகே தொழிலாளி வீட்டில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி தாலுகா உரிகம் அருகே உள்ள கோவுஅள்ளியைச் சேர்ந்தவர் சூடப்பா (வயது 55). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து சூடப்பா அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி விசாரணை நடத்தினார். இதில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (35) என்பவர், சூடப்பா வீட்டில் நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேப்பனப்பள்ளி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது நேரலகிரி. இங்குள்ள சோதனைச்சாவடியில் வேப்பனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே வேனை நிறுத்திய டிரைவர் போலீசை கண்டதும் கீழே இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வேனை வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அதில் இருந்த குட்கா பொருட்களை கணக்கிட்டனர். அதில் 13 பண்டல்களில் 9 வகையான குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். மேலும், ஆவணங்கள் மூலம் இவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்தவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வேப்பனப்பள்ளி அருகே ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ஓசூர் டவுன் ராமர்நகர் பகுதியை சேர்ந்த நூர் அகமது (வயது 37), சிப்காட் பேடரப்பள்ளியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிக்ராம் (42), பாகலூர் பெளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு (28), சூளகிரி ஒட்டையனூரில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நெமிசன்சர்மா (50), பாரூர் தேவீரஅள்ளி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (36), நாகரசம்பட்டி தாதன்கொட்டாய் நாராயணன்(45), தேன்கனிக்கோட்டை சிசான் தெரு மஞ்சு என்கிற மஞ்சுநாத் (35), கெலமங்கலம் பென்னிக்கல் திலீப்குமார் (26), ஊத்தங்கரை ஊமையன்கொட்டாய் வேடியப்பன் (41) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 500 கிராம் கஞ்சா என 4.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தின்னூரை சேர்ந்தவர் ருத்ரேஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இதையொட்டி அவருடைய மனைவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ருத்தேஷ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், தாவணைக்கரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சவுளூர் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த மணி (வயது 60), தாசன்கொட்டாய் மன்னேசன் (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.250-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    சூளகிரி ஒன்றியம் கிருஷ்ணாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 29). விவசாயி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் கேசவன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு பெற்றோர் இல்லை. நான் எனது சகோதரியுடன் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை என்னுடைய கிராமத்தை சேர்ந்த 11 பேர் போலியாக அவர்களின் பெயர்களுக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தேன். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் எதிர்தரப்பினர் பத்திர மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலி பத்திரத்தை ரத்து செய்து கொடுப்பதாக போலீசார் முன்பு எழுதி கொடுத்தனர்.

    பின்னர் இது சிவில் வழக்கு என்றும் போலீசார் தலையிட கூடாது என்றும் போலீசாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் கடந்த 9 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்ததால், எங்களை ஊர் நாட்டாமை, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சமூக புறக்கணிப்பு செய்துள்ளனர்.

    மேலும் இந்த சொத்தை எழுதிக் கொடுக்கும்படியும், இல்லையென்றால் எங்களை கொலை செய்துவிடுதாகவும் மிரட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (34) திருமணம் ஆகாதவர். நிலப்பிரச்சினை காரணமாக அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பிடுங்கி விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பப்டது.
    ×