என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
- நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.
அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
- பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மனம் உடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டார்
- பெண் உட்பட உறவினர்கள் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி,
கிருஷணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தேவர்மு க்குலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன்( (வயது36) இவர் சாப்பனிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உறவினர் செந்தில் அவரிடம் இருந்து கடனாக ரூ.15 ஆயிரம் பணத்தை சிலம்பரசன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் செந்தில், வாங்கிய பணத்துக்கு ரூ. 22 ஆயிரம் வட்டியுடன் கேட்டுள்ளார். அப்போது சிலம்பரசன் தன்னிடம் ரூ. 15 ஆயிரம் மட்டும் தான் உள்ளதாக சொல்லி கொடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலம்பரசனை தகாத வார்தைதகளால் செந்தில் திட்டியதாக தெரிகிறது.
இதில் மனம் உடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்(35) சுப்பிரமணி(60) சாந்தா(40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- 1090 வாக்குச்சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி எண்.3 மற்றும் பி.கே.பெத்தனப் பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் வாக்கு சாவடி எண்.7, 8 ஆகிய வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் 2024 சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டரு மான சரயு நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து அவர் கூறுகையில்:-
இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் 2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. 1.1.2024 தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இளம் வாக்காளர்கள் வாக் காளர் பட்டியில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள் ளும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 1090 வாக்குச்சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்து வாக்குச் சாவடி மையங்க ளிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்க ளுக்கு நேரடியாக சென்று படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வாக்காளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வும், திருத்தங்கள் மேற் கொள்ளவும் https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries மூலமும், தங்கள் கைப்பே சியில் Voters Helpline App என்ற செயலியை பதிவி றக்கம் செய்தும் விண்ணப் பிக்கலாம்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்.04343-1950 என்ற எண்ணில் அழைத்து, தங்களின் சந்தே கங்களுக்கு உரிய விளக்கம் பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரியான https://krishnagiri.nic.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் அவர்கள் வாக்களிக்கும் வாக்கு சாவடிகளுக்கு நேர டியாக சென்று படிவங் களை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ள இந்த சிறப்பு சுருக்க முறை திருத்த முகா மினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
- கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
- சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:
சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.
அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
சப்பாணிப்பட்டி அருகே இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாகச் சென்று மரத்தில் மீது மோதியது. இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு நெடுஞ்சாலை துறை துறையினர் வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். அப்பொழுது அதில் 33 குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது, இன்று காலை சப்பாணிப்பட்டி அருகே கார் ஒன்று வேகமாக சென்று விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அதில் 2 நபர்கள் வந்ததாகவும் ஒரு நபர் முகத்தில் பலத்த அடிபட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், காரில் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடி தலைமறைவு ஆகிவிட்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
- மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுக்கா தளி அருகே, மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாயவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறைக்கு அதிய முக்கியதுவம் அளித்து போதிய நிதி ஒதுக்கிடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். பொதுத் தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு 18 மாவட்டங்களின் தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்களை அன்பாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
பொது தேர்வுகள் முடிவுகள் வரும் போது தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களின் முழுமையான செயல்பாடுகள் தெரிய வரும். மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஊக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பழைய கட்டிடங்களை முழுமையாக அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட கருத்துரு தயார் செய்து போதிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். மேலும் காலை உணவு திட்ட செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- மாற்றுத்தி றனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
- எந்த ஒரு மாற்றுத்திறனா ளியும் விடுபடாமல் முழு மையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எண்ணற்ற திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்ட திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே, மாநில அளவில் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முடிக்கப்பட்டு, நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் மகளிர் மேம் பாட்டு திட்ட களப்பணியாளர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி
கணக்கெடுப்பிற்கும் செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்து அனைத்து தகவல்கள், மாற்றுத்திறன் தன்மைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெற வேண்டிய ஆவணங்கள் போன்ற விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாகவும், மென்மையாகவும், அவர்களின் இல்லம் தேடி சென்று தரவுகளை பெற வேண்டும்.
எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பின் மூலமே அரசின் மூலம் வழங்கப்பட உள்ள அனைத்து நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய இக்கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருப்பதால் இதில் அதிக கவனம் செலுத்தி இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பயிற்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் சந்தோஷ், பழனி, மாநில திட்ட மேலாளர் அருளப்பா, மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொ டுத்து டிக்கெட் பெற்றனர்.
- 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து அத்திப்பள்ளி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில், நேற்று மாலை, ஓசூர் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இவர்கள், மூக்கண்டபள்ளி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் என தெரிகிறது. அவர்களிடம் பஸ் பாஸ் இல்லாததால், பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாகவும், மேலும் இது தொடர்பாக கண்டக்டருக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த நிலையில், அந்த பஸ் மீண்டும் ஓசூர் பஸ் நிலையம் வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 10 பேர், கண்டக்டரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். மேலும், தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார். பின்னர், அவர்கள் இரு வரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
- 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூங்காவ னத்தம்மன் கோவி லில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
முன்னதாக 24- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 5- மணிக்கு மகாகணபதி பூஜை, கலச பூஜை, விநாயகா நவகிரஹா, ருத்ரா மற்றும் சாந்தி ஹோம மஹா பூர்ணா குதி நடைபெற்றது.
பின்னர். அதனை தொடர்ந்து சாமிக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் சுமந்து மேளதா ளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பாலாபிஷேக தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன'
அதனையடுத்து 9 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரம் ஆகிய கலசங்களுக்கு ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பின்னர் மூலவர் சிவன், பூங்காவ னத்தம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
இக்கும்பாபிஷேக விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பா டுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர் விழாவிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்
- டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார்.
- கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
மத்திகிரி,
ஓசூர் சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (43). வெல்டிங் காண்டிராக்டர். இவர் மத்திகிரி பழைய ஆனேக்கல் சாலை டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.
இவர் கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முகமது அலி ஜின்னா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பணம் கேட்டு மிரட்டியது மாரசந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (28), பழைய மத்திகிரி சேகர் (34) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- காவேரிப்பட்டினம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
- கிருஷ்ணகிரி மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் காவேரிப்பட்ட ணம் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் அம்சவள்ளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி பிரிந்தனர். அம்சவள்ளி காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கிருஷ்ணகிரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை மோகன் பாபு அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மோகன்பாபு தனது மனைவி வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மோகன்பாபுவின் தந்தை கருணாநிதி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






