என் மலர்
கிருஷ்ணகிரி
- போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
- போலீசார் தீபாவை கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி சுருதிலயா (29) 'இவர், தேன்கனிக்கோட்டை சாலை ஆர்.கே.நகர் பகுதியில் வணிக வரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஓசூர் தாலுக்கா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா (33) என்பவர், சுருதிலயாவிடம், சென்று, தன்னை ஒரு வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமு கப்ப டுத்திக்கொண்டு, போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், சுருதிலயா விசாரித்ததில், ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அப்படி ஒரு அதிகாரி இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் தீபாவை கைது செய்தனர்.
- புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியுடன் வெராண்டா லெர்னிங் சொலியுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் தலைவர் ஆர்.வி.ரங்கராஜன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை வெளி யிட,எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி பெற்றுக்கொண்டார். இதன்மூலம் மாணவர்கள் டிஎன்பிசி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வுகள், ரெயில்வே மற்றும் இன்சூரன்ஸ் போன்ற மத்திய மாநில அரசு போட்டித்தேர்வுகளில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ண்டான புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த கங்கள் அனைத்தும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியின்போது, எம்.ஜி.ஆர் கல்லூரி கணிதத்துறைத் தலைவர் மயில்வாகனன், நூலகத்துறை பேராசிரியர் சரவணமுத்து மற்றும் வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் மேலாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
- மனம் உடைந்த ஏழுமலை தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்ர ஓசூர் கோவிந்து அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32) இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 24ந்தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது இதில் கோபித்து கொண்டு தேவி குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு தனது தாய் வீடு உள்ள பெங்களூரு சென்று விட்டார். மனைவி மற்றும் தன்னை விட்டு பிரிந்து போனதால் மனம் உடைந்த ஏழுமலை தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் இது குறித்து ஒசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
- ஓசூர் பகுதியில் வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பரபரப்பாக இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் சகஜமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஓசூர் டவுன் மற்றும் அட்கோ, சிப்காட் பகுதியில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சில இடங்களில் சி.சி.டி.வி. கேமரா வைத்தும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து ஓசூர் டவுன் மத்திகிரி அட்கோ போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிய ஓசூர் பார்வதி நகர் முகமது அஸ்ரப் (வயது22), அபுபக்கர் (23), ராயக்கோட்டை சாலை சையத் முகமது அலி (19) மற்றும் 15, 17 வயதுடைய நபர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
- விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகசரம்பட்டி போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் நாகரசம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையம் கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் மற்றும் பூட்டி கிடக்கும் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி, பாரூர், கல்லாவி, பொம்மிடி, மத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனை தவிரவும் அவர்களுக்கு வேறு பல சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிக்கிய கொள்ளையர்களான செல்லம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் தண்டபாணி (22) போச்சம்பள்ளியை சேர்ந்த கண்ணப்பன் மகன் விநாயகப்பிரியன்(24) நாகரசம்பட்டி கக்கன்கா லணியை சேர்ந்த சுமன்(32) மேச்சேரியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ்(45) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
- கிருஷ்ணகிரி அருகே நீர்பிடிப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரிக்கை
- நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
போச்சம்பள்ளி அருகே உள்ள தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி கிராம ஏரி, 36.6 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு நிலங்களில் பலர் வீடுகள், மாட்டுகொட்டகைகள் கட்டியுள்ளனர். மேலும் இப்பகுதியில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.
ஏரியின் மொத்தப் பரப்பில் உள்ள நிலங்களில், சுமார், 10 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கிராமசபை கூட்டத்தில் மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், நீர் பிடிப்புகளின் நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால், விவசாயிகள் நீரை சேமித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோடை காலங்களில் விவசாயத்திற்கும், கால்நடை பராமரிப்பிற்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்து தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி ஏரி நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, விவசாயி கள் தேவைக்காக ஏரிக்கு கரை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை( 21) இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து பெற்றொர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஏழுமலை கடந்த 24ந்தேதி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஒசூர் அலச நத்தம் பகுதியை சேந்தவர் சீனிவாசன்(49) மீன் வியாபாரி.
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சீனிவாசன் 23ந்தேதி விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அக்கோ போலீசார், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் வைரமணி(63) இவருக்கு குடிபழக்கத்துக்கு அடிமையானவர்.
இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ந்தேதி மீண்டும் வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கவே விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று பாரூர் அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(29) இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சல் அடைந்த விக்னேஷ் கடந்த 22ந்தேதி விஷம் குடித்து அதே பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை போலீசா ருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஜாகடை முனிய ப்பன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்ப ட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று சிக்கியது.
இதனையடுத்து நாட்டு துப்பாக்கி வைத்திருந்தாக நலகொண்டப்பள்ளி பகுதியை சேர்்ந்த ராஜவேலு( வயது37) மற்றும் பழையபேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(43) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இவர்கள் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களது நோக்கம் என்ன என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் துடுகனஅள்ளி பக்கமுள்ள திம்மராயனள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவர் கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலைய எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் அண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதி க்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் திம்மநாயனஅள்ளியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் இருந்த மரத்தில் கடந்த 25-ந் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் காவேரி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் 2பேர் கைது
- போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முனதினம் அந்த ஸ்பா சென்டரில் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பா சென்டரை நடத்தி வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த முகமது, செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
- உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.
ஓசூர்:
ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.
அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
- கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் ஆனார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சிவம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகள் சுமதி(41) அவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்ப தாவது:-
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள சுன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவ ருக்கு எனது மகள் சந்தியா (24) என்பவரை சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தோம். அவருக்கு 4 வயதில் ஒரு குழத்தையும், ஒன்றரை வந்தில் ஒரு பெண் குழந்தை யும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ந்தேதி சிவம்பட்டி யில் நடந்த பூங்காவனத்து அம்மன் கோவில் திருவிழா வுக்கு பேரக்குழந்தைகளு டன் சந்தியா வந்திருந்தார்.
திருவிழா முடிந்து 25ந்தேதி மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தருமபுரி செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இரவு ஆகியும் எனது மகள் சுன்னம்பட்டி வரவில்லை என்று எனது மருமருகன் மகாலிங்கம் போன் செய்து வரவில்லை என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சந்தியா மற்றும் குழந்தை களை பல இடங்களில் தேடியும் அவர் எங்கே சென்றார் என்று தெரியவி ல்லை. நான் விசாரித்ததில் எனது மகள் சந்தியா பாரூரை சேர்ந்த வாசுதேவன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் அவருடன் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
ஆகவே எனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தேடி கண்டுப்பிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






