என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமான வரித்துறை அதிகாரி என்று மிரட்டி ரூ.1 லட்சம் வசூலித்த  பெண் கைது
    X

    வருமான வரித்துறை அதிகாரி என்று மிரட்டி ரூ.1 லட்சம் வசூலித்த பெண் கைது

    • போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
    • போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி சுருதிலயா (29) 'இவர், தேன்கனிக்கோட்டை சாலை ஆர்.கே.நகர் பகுதியில் வணிக வரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், ஓசூர் தாலுக்கா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா (33) என்பவர், சுருதிலயாவிடம், சென்று, தன்னை ஒரு வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமு கப்ப டுத்திக்கொண்டு, போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், சுருதிலயா விசாரித்ததில், ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அப்படி ஒரு அதிகாரி இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    Next Story
    ×