என் மலர்
கிருஷ்ணகிரி
- தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.
தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.
இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.
தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொடுகூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
- கவிழ்ந்த நிலையில் இருந்த நடுகல் மற்றும் கல்வெட்டினை கண்ட றிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி அடுத்த கொடுகூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொடுகூரில் இருந்து வெலகல அள்ளி செல்லும் சாலையில், ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டின் முன்பு உள்ள நிலத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுகல் மற்றும் கல்வெட்டினை கண்ட றிந்தனர்.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்ட சோழ முரசு நாட்டை ஆண்ட குறுவேந்த மாராயனின் மகன் பகைவர்கண்ட மாராயன், இவ்வூரை அழிக்க வரும்போது அவனை வழிமறித்த சண்டையில், படைத்த லைவன் சோமேசு என்பவன் இறந்த செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. படைத்தலைவனைக் குறிக்க தந்திரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடுகல்லில் வீரன் ஒரு கையில் வாளும், மறு கையில் வில்லையும் வைத்துள்ளான். அவனது உடம்பில் இரண்டு அம்புகள் தைத்து செல்கின்றன. அவ்வீரன் இறந்தபின் அவனை இரண்டு தேவலோக மங்கைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் மேல்புறத்தில் காட்ட ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஸ்ரீராமன் மற்றும் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது
- உரிய சான்று, கட்டண விவரங்களுடன் இணை யத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 58 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்ப டவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்கவேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள, 58 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது
இத்தேர்வுக்கு http://www.drbkrishnagiri.net என்ற இணையதளம் வழியாக வருகிற டிசம்பர் 1ம் வரை விண்ணப்பிக்கலாம், வருகிற டிசம்பர் 24ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சியோ, அங்கீகரிக்க ப்பட்ட பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பி க்கலாம்.
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டண விவரங்களுடன் இணை யத்தில் விண்ணப்பிக்கலாம்.
முற்பட்ட வகுப்பி னருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவி னருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்ப டையில் ஆட்கள் தேர்ந்தெ டுக்கப்படுவர்.
இது தொடர்பான விரிவான விவரங்கள் http://www.drbkrishnagiri.net என்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியி டப்பட்டுள்ளது. இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
- போட்டி யினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 400 மாணவிகள் கல்ந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம்அருகில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டி யினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண் குழந்கைளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடந்த இந்த மாரத்தான் போட்டியானது, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, லண்டன்பேட்டை ரவுண்டானா, கலைஞர் மேம்பாலம், ராயக்கோட்டை சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.
இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 150 மாணவிகள், கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 250 மாணவிகள் என மொத்தம் 400 மாணவிகள் கல்ந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய லட்சுமி, மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்கு மார், மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், காவல் துறையினர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கி ணைந்த சேவை மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மலா் அறுவடை, விற்பணை குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.
- ரூ.17 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி, தாா்பாலின், வேளாண் இடு பொருள்களை வழங்கினாா்
கிருஷ்ணகிரி,
ஒசூா் ஒன்றியம், ஈச்சங்கூா், அலசப்பள்ளி, பாகலூா் ஆகிய ஊராட்சி களில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.45 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் நடை பெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தாா்.
அமுத கொண்டப் பள்ளியில் டிட்கோ மற்றும் டேன்பிளோரா மையம் இணைந்து ரோஜா உள்ளிட்ட மலா் ஏற்றுமதி மையத்தை பாா்வையிட்டு, ரோஜா செடி நடவு, மலா் உற்பத்தி, ஏற்றுமதி பணிக ளுக்காக கொய்மலா் தயாா் செய்யும் பணிகள், குளிா்பதன கிடங்கில் மலா்கள் இருப்பு வைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை அவா் பாா்வை யிட்டாா்.
தொடா்ந்து அலசப்பள்ளி கிராமத்தில் ரூ.1 லட்சம் மானியத்தில் இயற்கை இடுபொருள் மண்புழு உரம், பஞ்சக்காவியம், ஜீவாமிா்தம், அமிா்த கரைசல், மீன் அமிலம் தயாரிப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, பாகலூரில் மலா் உற்பத்தி பணிகள், மழைநீா் சேகரிப்பு, இயற்கை உரம் இடும் பணிகள் மற்றும் மலா் அறுவடை, விற்பணை குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.
ஈச்சங்கூா் ஊராட்சி, தாசரப்பள்ளி கிராமத்தில் பட்டு வளா்ச்சித் துறை சாா்பாக, விவசாயி முரளி என்பவா் தனது 1.5 ஏக்கா் விவசாய நிலத்தில் ரூ.1,50,500 மானியத்தில் மல்பெரி நடவு செய்துள்ளதைப் பாா்வை யிட்டு, விவசாயிடம் புழு வளா்ப்பு பணிகள், பட்டு கூடு உற்பத்தி பணிகள் மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தாா். சொக்க நாதபுரம் கிராம த்தில் ரூ.3,97,500 மதிப்பில் மானியம் பெற்று மல்பெரி நடவு செய்துள்ள பணிகளை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, ஈச்சங்கூா் கிராமத்தில், ரூ. 17,50,000 மானியம் பெற்று ரோஜா, ஜொ்பரா உள்ளிட்ட மலா்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், எழுவப்பள்ளி கிராமத்தில் ரூ. 435 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பசுமை கூடாரம், பூங்கொத்து கட்டும் அறை மற்றும் மலா்களுக்கான குளிா்சாதன கிடங்கு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மாவட்ட கலெக்டர் அலசப்பள்ளி கிராமத்தில், வேளாண்மைத் துறை சாா்பாக, 10 பயனாளிகளுக்கு ரூ. 17 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி, தாா்பாலின், வேளாண் இடு பொருள்களை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, தோட்ட க்கலைத் துறை உதவி இயக்குநா்கள் சிவசங்கரி, உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனூர் காப்பு காட்டின் எல்லைக்கு உட்பட்ட தாவரக்கரை கிராமத்திற்கருகே, கடந்த 26-ந் தேதி நொகனூர் காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, தாவரக்கரை கிராமத்திற்கு அருகில் உள்ள, நாராயணன் என்கிற பால்நாராயணன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மின் மோட்டாருக்கு அமைக்கப்பட்டிருந்த காப்பிடப்பட்ட கம்பியை எதிர்பாராத விதமாக யானை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
பின்னர். ஓசூர் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளர் கார்த்திகேயனி, தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தணிக்கை மேற்கொண்டு, வனக்கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் அறிவுரைப்படி, ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் உத்தரவுப்படி, இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் வனஉயிரின குற்ற வழக்கு பதிவுசெய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வேலு என்பவரின் மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதில், அவர் கடந்த 8 ஆண்டுகளாக தாவரக்கரை கிராமத்தில் சம்பவம் நடைபெற்ற விவசாய நிலத்தை உழுதும், மின்சாரம் சம்பந்தப்பட்ட சிறு சிறு பணிகளை கவனித்தும், அங்கேயே தங்கி அவரது பொறுப்பிலேயே கவனித்தவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மேற்படி விவசாய தோட்டத்தில் மின்சார கேபிள் இணைப்பிணை ஏற்படுத்தி, அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்து வந்ததாகவும்,அதனை எதிர்பாரத விதமாக ஒரு யானை கடித்து உயிரிழந்தது என்றார்.
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பிற்கு காரணமான விவசாயி கார்த்திக் என்பவரை கைது செய்து தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடந்தது.
- திருமுறை ஒப் புவித்தல் போட்டியுடன் விழா நிறைவடைகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கந்திகுப்பம் பகுதியில் உள்ள பைரவ நிலையத்தில் 16-ம் ஆண்டு காலபைர வாஷ்டமி விழா நேற்று பைரவநாத சுவாமிகள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, பேராசிரியர் தனராசு சொற்பொழி வாற்றினார். மாலை விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இன்று 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடக்கிறது.
நாளை (30-ம் தேதி) திருமுருகன் தீந்தமிழ் வேள்வி, 1-ம் தேதி சொர்ணகர்ஷண பைரவர் வேள்வி, வீதி உலா, 2-ம் தேதி முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம், 3-ம் தேதி திருக்கல்யாணம், 4-ம் தேதி சிறப்பு அபிஷேகம்-இசை சொற்பொழிவு, 5-ம் தேதி உக்ர காலபைரவருக்கு தீத்தமிழ்வேள்வி, அபிஷேகம், பால்குட ஊர்வலம் நடக்கிறது.
வரும் 6-ம் தேதி, வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, 7-ம் தேதி திரிபுரிபை ரவி அம்மன் உடனமர் பைரவநா தப்பெருமான், ஆடல் வல்லானுக்கும் சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு திருமுறை விண்ணப்பம், உரியடித்தல் போட்டி, திருமுறை ஒப் புவித்தல் போட்டியுடன் விழா நிறைவடைகிறது.
இது குறித்து பைரவ நிலை யத்தின் பைரவநாத சுவா மிகள் கூறுகையில், 'விழா நடைபெறும் 10 நாட்களும் பக்தர்களுக்கு 3 வேளையும் அறுசுவை உணவு வழங் கப்படும். விழாவினை யொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது,' என்றார்.
- போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
- போலீசார் தீபாவை கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி சுருதிலயா (29) 'இவர், தேன்கனிக்கோட்டை சாலை ஆர்.கே.நகர் பகுதியில் வணிக வரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஓசூர் தாலுக்கா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா (33) என்பவர், சுருதிலயாவிடம், சென்று, தன்னை ஒரு வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமு கப்ப டுத்திக்கொண்டு, போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், சுருதிலயா விசாரித்ததில், ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அப்படி ஒரு அதிகாரி இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் தீபாவை கைது செய்தனர்.
- புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியுடன் வெராண்டா லெர்னிங் சொலியுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் தலைவர் ஆர்.வி.ரங்கராஜன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை வெளி யிட,எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி பெற்றுக்கொண்டார். இதன்மூலம் மாணவர்கள் டிஎன்பிசி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வுகள், ரெயில்வே மற்றும் இன்சூரன்ஸ் போன்ற மத்திய மாநில அரசு போட்டித்தேர்வுகளில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ண்டான புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த கங்கள் அனைத்தும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியின்போது, எம்.ஜி.ஆர் கல்லூரி கணிதத்துறைத் தலைவர் மயில்வாகனன், நூலகத்துறை பேராசிரியர் சரவணமுத்து மற்றும் வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் மேலாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
- மனம் உடைந்த ஏழுமலை தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்ர ஓசூர் கோவிந்து அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32) இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 24ந்தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது இதில் கோபித்து கொண்டு தேவி குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு தனது தாய் வீடு உள்ள பெங்களூரு சென்று விட்டார். மனைவி மற்றும் தன்னை விட்டு பிரிந்து போனதால் மனம் உடைந்த ஏழுமலை தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் இது குறித்து ஒசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
- ஓசூர் பகுதியில் வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பரபரப்பாக இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் சகஜமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஓசூர் டவுன் மற்றும் அட்கோ, சிப்காட் பகுதியில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சில இடங்களில் சி.சி.டி.வி. கேமரா வைத்தும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து ஓசூர் டவுன் மத்திகிரி அட்கோ போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிய ஓசூர் பார்வதி நகர் முகமது அஸ்ரப் (வயது22), அபுபக்கர் (23), ராயக்கோட்டை சாலை சையத் முகமது அலி (19) மற்றும் 15, 17 வயதுடைய நபர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
- விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகசரம்பட்டி போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் நாகரசம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையம் கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் மற்றும் பூட்டி கிடக்கும் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி, பாரூர், கல்லாவி, பொம்மிடி, மத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனை தவிரவும் அவர்களுக்கு வேறு பல சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிக்கிய கொள்ளையர்களான செல்லம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் தண்டபாணி (22) போச்சம்பள்ளியை சேர்ந்த கண்ணப்பன் மகன் விநாயகப்பிரியன்(24) நாகரசம்பட்டி கக்கன்கா லணியை சேர்ந்த சுமன்(32) மேச்சேரியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ்(45) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.






