என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய காட்சி.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
- போட்டி யினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 400 மாணவிகள் கல்ந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம்அருகில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டி யினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண் குழந்கைளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடந்த இந்த மாரத்தான் போட்டியானது, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, லண்டன்பேட்டை ரவுண்டானா, கலைஞர் மேம்பாலம், ராயக்கோட்டை சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.
இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 150 மாணவிகள், கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 250 மாணவிகள் என மொத்தம் 400 மாணவிகள் கல்ந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய லட்சுமி, மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்கு மார், மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கட்டிகானப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், காவல் துறையினர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கி ணைந்த சேவை மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






