என் மலர்
உள்ளூர் செய்திகள்

700 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
- கொடுகூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
- கவிழ்ந்த நிலையில் இருந்த நடுகல் மற்றும் கல்வெட்டினை கண்ட றிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி அடுத்த கொடுகூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொடுகூரில் இருந்து வெலகல அள்ளி செல்லும் சாலையில், ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டின் முன்பு உள்ள நிலத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுகல் மற்றும் கல்வெட்டினை கண்ட றிந்தனர்.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்ட சோழ முரசு நாட்டை ஆண்ட குறுவேந்த மாராயனின் மகன் பகைவர்கண்ட மாராயன், இவ்வூரை அழிக்க வரும்போது அவனை வழிமறித்த சண்டையில், படைத்த லைவன் சோமேசு என்பவன் இறந்த செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. படைத்தலைவனைக் குறிக்க தந்திரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடுகல்லில் வீரன் ஒரு கையில் வாளும், மறு கையில் வில்லையும் வைத்துள்ளான். அவனது உடம்பில் இரண்டு அம்புகள் தைத்து செல்கின்றன. அவ்வீரன் இறந்தபின் அவனை இரண்டு தேவலோக மங்கைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் மேல்புறத்தில் காட்ட ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஸ்ரீராமன் மற்றும் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.






