என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
- கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பம் அடுத்த ராகிமானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை அளவிலான 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், வேன் டிரைவரான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விக்ரம்குமார் என்பவரை கைது செய்த னர்.
விசாரணையில் அரிசியை காவேரிப்பட்டணம், பில்லனகுப்பம், ராகிமானப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த அரிசியை வீடு வீடாக சென்று வாங்கி வந்த சுண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்கிற டேம் ராஜா, அரிசி மற்றும் வேன் உரிமையாளரான ராகிமானப்பள்ளியை சேர்ந்த அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.






