என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 5 பேர் கைது
    X

    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 5 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
    • ஓசூர் பகுதியில் வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பரபரப்பாக இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் சகஜமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஓசூர் டவுன் மற்றும் அட்கோ, சிப்காட் பகுதியில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சில இடங்களில் சி.சி.டி.வி. கேமரா வைத்தும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை சிலர் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து ஓசூர் டவுன் மத்திகிரி அட்கோ போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

    இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிய ஓசூர் பார்வதி நகர் முகமது அஸ்ரப் (வயது22), அபுபக்கர் (23), ராயக்கோட்டை சாலை சையத் முகமது அலி (19) மற்றும் 15, 17 வயதுடைய நபர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×