நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை போலீசா ருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஜாகடை முனிய ப்பன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்ப ட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று சிக்கியது.

இதனையடுத்து நாட்டு துப்பாக்கி வைத்திருந்தாக நலகொண்டப்பள்ளி பகுதியை சேர்்ந்த ராஜவேலு( வயது37) மற்றும் பழையபேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(43) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இவர்கள் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களது நோக்கம் என்ன என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com