என் மலர்
கரூர்
- கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது
- பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவைமாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் வரும் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக 13ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குள் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடைபல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்கள் 04324 294335 மற்றும் 7339057073 மூலம் தொடர்பு கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.
- செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
தமிழக அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்கு தொடர்புடையதாக கருதப்பட்ட சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர் வீடு, அலுவலகங்களில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை ராணுவ படை போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதனை தொடர்ந்து 2-வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சார துறை மற்றும் ஆயர் தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 3-வது முறையாக தற்போது வருமான வரித்துறையினர் கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த வருமான வரித்துறையினர் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை.
இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரிதுறை சோதனை தொடங்கியுள்ளது கரூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரூர் பெண் மணப்பாறையில் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தியதால் கைது செய்யப்பட்டு உள்ளார்
- வீட்டை வாடகைக்கு பிடித்து விபச்சாரம் நடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது
மணப்பாறை,
மணப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது கரூர் மாவட்டம், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பானுமதி(வயது 50) என்பவர், பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மைலம்பட்டியை சேர்ந்த அமீர்(23), சல்மான்கான்(24) ஆகியோரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
- செம்மண் கடத்திய டிராக்டர் டிப்பருடன் பறிமுதல் செய்யப்பட்டது
- தப்பி ஓடிய டிரைவரை விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்
கரூர்,
குளித்தலை அடுத்த, ஆதனுார் பஞ்.,சென்னம்பட்டி பகுதியில் கிராவல் மண், காட்டாற்று மணல், செம்மண் கடத்துவதாக சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., கனகராஜூக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி சென்னம்பட்டி குளத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, ஒரு யூனிட் செம்மண்ணை டிராக்டர் டிப்பருடன் கடத்திச் சென்றது தெரியவந்தது.வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். சிந்தாமணிப்பட்டி போலீசார் விரட்டி பிடித்து, டிரைவர்செ ன்னம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.
- கரூர் அருகே ஆசிரியை மாயமாகி உள்ளார்
- தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது- மகள் பிரியா (வயது 24). காக்காவாடியில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற, ஆசிரியை பிரியா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால், தந்தை ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- க.பரமத்தி அருகே மது பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் அருகேயுள்ள சாலப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத் தினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த காளியண்ணன் மகன் பெரிய சாமி (வயது 50) என்பவர் மது விற்பனைக்காக 4 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சின்ன " தாராபுரம் போலீசார் - பெரியசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கரூர் மாவட்ட உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது
- தோட்டக்கலை துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் இயங்கி வரும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – விற்பனை மையம் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் முதற்கட்டமாக 300 கிலோ தக்காளி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த விற்பனையை தோட்டக்கலை துணை இயக்குநர் மணிமேகலை தொடங்கி வைத்தார். விற்பனை தொடக்க நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர்(ந.பொ) சுதா காவேரி, தோட்டக்கலை உதவி இயக்குநர், கவிதா தாந்தோணி வட்டாரம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நவீன், யுவராஜ், உதவி வேளாண் அலுவலர் கலைச்செல்வன் மற்றும் சதீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
- புன்னம் சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் ரெங்கம்பாளையம் பிரிவு அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராமன் (வயது 22) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ரியாத் (22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகளூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
- வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் முகாம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர்.
- கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
- மொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையில் 30 மாணவிகள் சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெற்ற விழிப்புணர்வு நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 180-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெவ்வேறு விதமான தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை விளக்கினர்.
அதில் சிறந்த ஆய்விற்கான முதல் பரிசு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் பூமிகா, ரிலானா சாகின், ஆர்த்தி, சாரதி மற்றும் 2-ம் பரிசு மகேஷ்வரி, திலகவதி, பிருந்தாவனம், லோகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதில் சிறந்த ஆய்வு மற்றும் ஆய்வு கட்டுரைக்கான ஒட்டுமொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.
இக்கருத்தரங்கில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சாந்தி, துறைப் பேராசிரியர்கள் கவிப்பிரியா, சாலினி மற்றும் ராபிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். பரிசு வென்ற மாணவ, மாணவிகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரூம் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்
கரூர்,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். கரூர் மாநகராட்சியின் 9-வது மாமன்ற உறுப்பினரும் கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியம், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோண்றி குமார், மாவட்ட துணை தலைவர்கள் கோகுலே, ஜாகிர் உசேன், அரவக்குறிச்சி நகர் மன்ற உறுப்பினர் பஜிலா பானு, நகரத் துணைத் தலைவர்கள் பாலமுருகன், வீரராக்கியம் மாணிக்கம், சுப்பன், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன் நன்றி கூறினார்.
- வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
- வெல்லம் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். கரும்புகள் மூலம் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும், அச்சுவெல்லம் ரூ.170-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220-க்கும் விற்பனையானது. வெல்லம் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






