என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
    X

    உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

    • கரூர் மாவட்ட உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது
    • தோட்டக்கலை துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் இயங்கி வரும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – விற்பனை மையம் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் முதற்கட்டமாக 300 கிலோ தக்காளி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த விற்பனையை தோட்டக்கலை துணை இயக்குநர் மணிமேகலை தொடங்கி வைத்தார். விற்பனை தொடக்க நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர்(ந.பொ) சுதா காவேரி, தோட்டக்கலை உதவி இயக்குநர், கவிதா தாந்தோணி வட்டாரம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நவீன், யுவராஜ், உதவி வேளாண் அலுவலர் கலைச்செல்வன் மற்றும் சதீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×