என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகளூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
    X

    புகளூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • புகளூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
    • வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் முகாம் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர்.

    Next Story
    ×