என் மலர்
கரூர்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்
- புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பூசாரிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தார் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சசிகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சசிகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவருடன் வந்த மற்றொரு டிரைவர் நந்தகுமார் சசிகுமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் மனைவி மோகனாம்பாள் (40) வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நடைபெற்றது
- போட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் கலந்துகொள்வதற்கான போட்டித்தேர்வு வேலாயுதம்பாளையம் மலைநகரில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் நடைபெற்றது. கராத்தே போட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர். இதில் கியோஷி சரவணன் மற்றும் ரென்சி செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளை கராத்தே பயிற்சி சீனியர் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
- கரூர் வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு செயலாளர் தேர்தல் நடைபெற்றது
- முதலாமாண்டு மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் துறை வாரியாக மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்பு பாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு அனைத்து துறை மாணவிகளுக்கும் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. முதலாமாண்டு மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் துறை வாரியாக மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டனர். அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் துறை வாரியாக தங்களது வாக்கினை பதிவு செய்தனர். வாக்கு பதிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைப்படி நடைபெற்றது. வாக்குகள் பிற்பகல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், தலைமைத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடினார். இதில் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கரூர் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை பேரவை தொடக்க விழா நடைபெற்றது
- விழாவில் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன், கல்லூரியின் துணை முதல்வர் ரதி தேவி, கல்லூரி உள்தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன வடிவு ஆகியோர்கள் பங்கேற்று பேசினர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள நவரசம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழை நேசித்து படியுங்கள், சுவாசித்து படியுங்கள், தமிழால் உயருங்கள், தமிழால் வளருங்கள், தமிழை உயர்த்தி வாழ்வின் ஆதாரம் தமிழென்று பெருமையாக சொல்லுங்கள் என்று சிறப்புரை ஆற்றி அறம் தமிழ் மன்றத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் யோகப்பிரியா, சரண்யா, சங்கீதா, சண்முகபிரியா, நித்யா, கல்பனா, பூமதி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் பிற துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
- 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
வேலாயுதம்பாளையம்,
தமிழ்நாடு கயிறு இழுக்கும் சங்கம் சார்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சி.எம்.அண்ணாமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விளையாடி மூத்தோர் மகளிர் அணி உறுப்பினர்கள் தங்கம் வென்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவிகளை, ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி, தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, கல்லூரியின் முதல்வர் சாருமதி, இயக்குனர்கள், துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
- புகளூர் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் ரூ.78 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது
- மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் செய்தித்தாள் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வருபவர் அண்ணாமலை (வயது 55). இவர் காகித ஆலை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி அண்ணாமலை தனது மகளின் படிப்புக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காகித ஆலை காவலாளி காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள சி43 பகுதிக்கு ரோந்து சென்றுள்ளார்.
அப்போது அண்ணாமலை வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. இதுகுறித்து காவலாளி துணை மேலாளரிடம் தெரிவித்துள்ளார். துணை மேலாளர் இதுகுறித்து உடனடியாக சென்னையில் இருந்த அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் சென்னைக்கு சென்றிருந்த அண்ணாமலை உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த காசி மாலை, ஆரம், நெக்லஸ், வளையல், தோடு, செயின் உள்ளிட்ட 115 பவுன் தங்கச் செயின்கள், வெள்ளி கொலுசுகள் 600 கிராம், ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. திருட்டுப் போன மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.78 லட்சம் ஆகும். அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை இது கறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம் செல்லும் சாலை, குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காகித ஆலை நிறுவனம் சார்பில் பாதுகாப்பு பணியில் காவலாளி போடப்பட்டிருந்தும் குடியிருப்பு வளாகத்துக்குள்ளையே பெரிய அளவில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது
- பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூர்,
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலபைரவருக்கு தொடர்ந்து பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரா தனை காட்டப்பட்டது.
- பிள்ளபாளையத்தில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
- குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக, காவிரியாற்றிலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வந்து நீர்தேக்க தொட்டியில் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரியாற்றிலிருந்து வரும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியபடி உள்ளது. இதனால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 517 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்தி றனாளிக ளிடம் 80 மனுக்கள் பெறப்ப ட்டது.கூட்டத்தில் ரூ.17.77 வமடசதட தாடிபடபடீமடவைட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, 6 நபருக்கு தலா 2,760 மதிப்பில் ரூ.16.580 மதிப்பிலான காதொலிக்கருவிகளும், 1 நபருக்கு ரூ1,344 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும், 3 நபர்களுக்கு ரூ.2,280 மதிப்பீட்டில் ஊான்று கோலும். 1 நபருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.7,170 மதிப்பீட்டில் சலவை ப்பெட்டியும், குளித்தலை வட்டத்தை சேர்ந்த பில்லூர் கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிர் இழந்ததை தொடர்ந்து அவரது தாயார் கற்பகத்திடம் ரூ.2 லட்ச த்திரிகான முதலமைச்சர் நிவாரண நிதியும். 1 நபருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் நத்தம் பட்டாக்கான ஆணைகளும், 2 நபருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிணமத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தலா ரூ.25 ஆயிரம் வைப்புநிதி பத்திரத்தையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 35 மகளிர் சுய ஊதவிக்குழு தொழில் முனைவோர் நபர்களுக்கு ரூ.15 இலட்சத்திற்கான நுண் கடன் நிதி உதவியும் ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரம் 474 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளார்ச்சி முகமை), சீனிணசன்(மகளிர் திட்டம், தனித்துணை ஆட்ரியர்(ச.பா.தி)சைபுதீன், மற்றும் அனை த்துத்துறை அலுவ லர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
- வேலாயுதம் பாளையத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
- ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.18.76 லட்சத்துக்கு விற்பனை
- தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஏலம் நடைபெற்றது
வேலாயுதம் பாளையம்,
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.18.76 லட்சத்துக்கு ஏலம் போனது.சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்த வாரம் நடந்த ஏலத்தில் 51.84 ½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 233 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.45-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.01-க்கும், சராசரி விலையாக ரூ.20.60-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 2ஆயிரத்து 475-க்கு விற்பனையானது.அதேபோல் 256.48 குவிண்டால் எடை கொண்ட 549-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.99-க்கும், சராசரி விலையாக ரூ.73.29-க்கும் விற்பனையானது.2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.89-க்கும், சராசரி விலையாக ரூ.67.79-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து73ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.18லட்சத்து75 ஆயிரத்து 892-க்கு விற்பனையானது.
- விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயத்திற்கான அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- 100 பேர் வரை குழுவாக இணைய முடியும் என விளக்கம்
வேலாயுதம்பாளையம்,
இயற்கை வேளாண் முறையில் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்கு தற்சமயம் கட்டணமின்றி தேசிய பங்கேற்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இயற்கை விவசாயம் செய்யும் ஒரு கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே 7முதல் 25 பேர் வரை கொண்ட ஒரு குழுவாக இணைய வேண்டும். இதில் அதிகபட்சம் 100 பேர் வரை குழுவாக இணைய முடியும். இவ்வாறு இணையும் குழுவினர் அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என்ற உறுதிமொழி ஏற்று இத்திட்டத்தில் இணையலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படும் குழுக்களுக்கு தலைவர், செயலாளர் ஆகியோரை தேர்வு செய்வதுடன் குழுவுக்கு தனியாக பெயர் வைக்க வேண்டும். பின்னர் குழு உறுப்பினர்களின் பெயர், கிராமம், பட்டா, ஆதார் எண், போட்டோ மற்றும் நிலவுடமை ஆவணங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.






