என் மலர்
கரூர்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 46 கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 221 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள 2,392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கடன் தொகையினை வழங்கி பேசும்போது,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,மகளிர்களின் குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்திடும் விதமாக 10.30 சதவீதம் குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 182 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 2,215 உறுப்பினர்களுக்கு ரூ.19.16 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் விதமாக 34 நியாய விலை கடைகளுக்கு க்யூ ஆர் கோடு வழங்கக்கூடிய அந்த நிகழ்வும் அதே போல இரண்டு நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலேயே நமது மாவட்டத்தில் தான் 21 நியாய விலைக் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகின்றது. வரும் காலங்களில் அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கழிவுநீர் வடிகால் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
- கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை அருகே இருந்து தனியார் பள்ளி வழியாக திருப்பதி நகருக்கு தார் ரோடு செல்கிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் வகையில் திருப்பதி நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாலம் வரை சாக்கடை கட்டுவது, பின்னர் அந்த இடத்தில்சோ க்பீட் அமைத்து கழிவு நீரை பூமிக்குள் வடிய வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு தார் ரோட்டின் வடபுறமாக குழி தோண்டப்பட்டு சாக்கடை கட்டுமானப்பணி தொடங்கியது. இதில் திருப்பதி நகரில் இருந்து சோக்பீட் அமைய உள்ள இடத்திற்கு 200 அடி முன்பு வரை சாக்கடை கட்டப்பட்டுள்ளது. அதற்கடுத்து கட்டுமானப்பணி நடைபெறாததால் கடந்த 10 மாதங்களாக சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி அப்படியே உள்ளது. அதன்காரணமாக திருப்பதி நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிய வழியின்றி இந்த குழியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாவதால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்இ வ்வழியாக தினமும் காலையும் மாலையும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் டூ வீலர்களிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த ஒருவழிப்பாதையில் சற்று கவனக்குறைவு ஏற்பட்டால் சாக்கடைக்காக தோண்டப்பட்ட இந்த குழியால் விபத்து ஏற்படவும் வாய்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் கழிவு நீர் தேங்காத வகையிலும், விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையிலும் சாக்கடை கட்டுமானப்பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூர் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று பேரவை தொடங்கப்பட்டது
- ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில், வரலாற்று பேரவைத்துவக்க விழா நடைபெற்றது.விழாவில் கல்லூரியின் தாளாளர் கோதை நடேசன் முன்னிலை வகித்தார். அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான முனைவர் நடேசன் தலைமை தாங்கினார். அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினியர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். 3-ஆம் ஆண்டு மாணவி தீபா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் பெமிலா அலெக்சாண்டர் கலந்து கொண்டு இந்திய வரலாற்றில் பெண்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி, தர கட்டுப்பாட்டு அலுவலர் மோகன வடிவு மற்றும் வரலாற்று துறை பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மூன்றாம் ஆண்டு மாணவி கரிஷ்மா நன்றி கூறினார்.
- கரூர் அருகே குடிநீர் தொட்டியில் சோப்பாயில் ஊற்றி கலந்த 3 முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
- தலைமை ஆசிரியரை பழி தீர்க்க குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியதாக ஒப்புதல்
கரூர்,
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி அருகேயுள்ள வீரணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளில் கடந்த 11-ந் தேதி இரவு மர்ம நபர்கள் ேசாப்பு ஆயிலை கலந்து சென்றனர். இதையடுத்து மறுநாள் பள்ளிககு சென்ற மாணவ, மாணவிகள் குடிநீரை பயன்படுத்தியபோது சோப்பு நெடி வீசியதை அறிந்து, தலைமை ஆசிரியர் ஜேசுராஜியிடம் புகார் செய்தனர். பின்னர் அவர் போலீசில் புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் சோப்பு ஆயிலை கலந்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 3 பேரை பிடித்து விசாரித்ததில், குடிநீர்த் தொட்டியில் சோப்பு ஆயிலை கலந்தது அவர்கள்தான் என உறுதியானது.கடந்த ஆண்டு இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த இந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததை தலைமை ஆசிரியர் கண்டித்தாராம். இதனால் அவர் மீதுள்ள கோபத்தில், அவரை பழிவாங்குவதற்காக இச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டப் பகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். வழக்கம் போல் அவர் காலை வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் செயின் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது . இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் மேலும் சில வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பட்டப்பகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சின்னதாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
- காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கபடவுள்ளது
- விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
கரூர்,
பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் இணையதளம் மூலமோ அல்லது மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து மாவட்ட அல்லது வட்டார அலுவல கங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டரால் அரசு நிகழ்வு அல்லது விழாக்களின் போது சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது.
முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம். பாரம்பரிய காய்க றிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிசெய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டு எடுத்தல், பிறவிவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய கார ணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் தோட்டக்கலை இணை, துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்மை) ஆகியோர் அடங் கிய மாவட்ட அளவிலானதேர்வுக்குழு மாவட்ட அளவிலான விருது பெறும் இரண்டு விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பார்கள். விண்ணப்பம் https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- தவுட்டுப்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் ராஜலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 82) என்பவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்
- இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (வயது 63). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள பூக்களை பறிப்பதற்காக கிணற்றின் அருகே சென்று பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். பூக்களை பறிக்க போன மஞ்சுளா வெகுநேரமாக வீடு திரும்பாதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய கிணற்று பகுதிக்கு சென்று பார்த்த போது மஞ்சுளா நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மூழ்கி இறந்த மஞ்சுளாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
- வேலாயுதம்பாளையம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
- இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- தேனிலவுக்கு கன்னியாகுமரி சென்ற கரூர் புதுப்பெண் உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது25). என்ஜினீயர். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களான நிலையில் தேனிலவுக்காக கன்னியாகுமரிக்கு ெ சன்றனர். அவர்கள் சிற்றாறில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் விடுதி உணவறையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கிருபாவுக்கு விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனிலவுக்க வந்த இடத்தில் புதுப்பெண் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- தம்பதியை வெட்டி கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- தலா ரூ.22,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கபட்டது
கரூர்,
கரூரை அடுத்த ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 37), ஏசி மெக்கானிக். இவர் மனைவி தீபிகா (29). இவர்கள் மகள் அக்சயா (4). ரெங்கநாதன் குடும்பத்துடன் மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார். ரெங்கநாதனின் சித்தி மகன்கள் பார்த்திபன் (வயது 26), கவுதம் (19), பிரவீண் (25). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. அய்யம்பாளையத்தில் உள்ள ரெங்கநாதன் வீட்டுக்கு கடந்த 2020ம் ஆண்டு மே 11ம் தேதி இரவு பார்த்திபன், கவுதம், பிரவீண் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.ரெங்கநாதனை பார்த்திபன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரெங்கநாதன் தலை மீது கவுதம் காஸ் சிலிண்டரை தூக்கி போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த தீபிகாவை பிரவீண் அரிவாளால் வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிரவீண் தலைமறைவானார். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில், பார்த்திபன், கவுதம் ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.22,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
- கரைப்பாளையம் அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஒத்திகை பயிற்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கரைப்பாளையம் ஆலமரத்து மேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி செய்து காட்டினார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பு எரியும் பொழுது மண்ணெண்ணெயை நிரப்பக்கூடாது.
மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் இருக்கக் கூடாது. குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்ட உடனே மின் இணைப்பு துண்டிக்கபட வேண்டும். சமையல் அறையில் எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான், நைலக்ஸ் போன்ற சேலைகளை அணிந்து சமையல் செய்யக்கூடாது. வாயுக்கிடங்கு, பெட்ரோல் நிலையம் ஆகிய இடங்களில் அலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளை செய்து காட்டினர். ஒத்திகை பயிற்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






