என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
- புகளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்
- இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (வயது 63). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள பூக்களை பறிப்பதற்காக கிணற்றின் அருகே சென்று பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். பூக்களை பறிக்க போன மஞ்சுளா வெகுநேரமாக வீடு திரும்பாதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய கிணற்று பகுதிக்கு சென்று பார்த்த போது மஞ்சுளா நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மூழ்கி இறந்த மஞ்சுளாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.






