search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் வடிகால் குழியால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    கழிவுநீர் வடிகால் குழியால் விபத்து ஏற்படும் அபாயம்

    • கழிவுநீர் வடிகால் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
    • கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை அருகே இருந்து தனியார் பள்ளி வழியாக திருப்பதி நகருக்கு தார் ரோடு செல்கிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் வகையில் திருப்பதி நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாலம் வரை சாக்கடை கட்டுவது, பின்னர் அந்த இடத்தில்சோ க்பீட் அமைத்து கழிவு நீரை பூமிக்குள் வடிய வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு தார் ரோட்டின் வடபுறமாக குழி தோண்டப்பட்டு சாக்கடை கட்டுமானப்பணி தொடங்கியது. இதில் திருப்பதி நகரில் இருந்து சோக்பீட் அமைய உள்ள இடத்திற்கு 200 அடி முன்பு வரை சாக்கடை கட்டப்பட்டுள்ளது. அதற்கடுத்து கட்டுமானப்பணி நடைபெறாததால் கடந்த 10 மாதங்களாக சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி அப்படியே உள்ளது. அதன்காரணமாக திருப்பதி நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிய வழியின்றி இந்த குழியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாவதால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்இ வ்வழியாக தினமும் காலையும் மாலையும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் டூ வீலர்களிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த ஒருவழிப்பாதையில் சற்று கவனக்குறைவு ஏற்பட்டால் சாக்கடைக்காக தோண்டப்பட்ட இந்த குழியால் விபத்து ஏற்படவும் வாய்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் கழிவு நீர் தேங்காத வகையிலும், விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையிலும் சாக்கடை கட்டுமானப்பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×