என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவுட்டுப்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது
    X

    தவுட்டுப்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது

    • தவுட்டுப்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ராஜலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 82) என்பவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×