என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்பாளையம் அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கரைப்பாளையம் அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கரைப்பாளையம் அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஒத்திகை பயிற்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கரைப்பாளையம் ஆலமரத்து மேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி செய்து காட்டினார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பு எரியும் பொழுது மண்ணெண்ணெயை நிரப்பக்கூடாது.

    மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் இருக்கக் கூடாது. குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்ட உடனே மின் இணைப்பு துண்டிக்கபட வேண்டும். சமையல் அறையில் எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான், நைலக்ஸ் போன்ற சேலைகளை அணிந்து சமையல் செய்யக்கூடாது. வாயுக்கிடங்கு, பெட்ரோல் நிலையம் ஆகிய இடங்களில் அலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகளை செய்து காட்டினர். ஒத்திகை பயிற்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×