என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு செயலாளர் தேர்தல்
- கரூர் வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு செயலாளர் தேர்தல் நடைபெற்றது
- முதலாமாண்டு மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் துறை வாரியாக மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்பு பாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு அனைத்து துறை மாணவிகளுக்கும் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. முதலாமாண்டு மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் துறை வாரியாக மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டனர். அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் துறை வாரியாக தங்களது வாக்கினை பதிவு செய்தனர். வாக்கு பதிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைப்படி நடைபெற்றது. வாக்குகள் பிற்பகல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், தலைமைத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடினார். இதில் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.






